Wednesday, March 27, 2013

நபி இஸ்மாயில் அலைஹி வசல்லம் அவர்களது வரலாறு


பிஸ்மில்லாகிர் ரஹ்மானிர் ரஹீம்

" அளவற்ற அருளாளன் நிகரற்ற அன்புடையோன் அல்லாஹுவின் திரு பெயரால் ஆரம்பம் செய்கிறேன் "

அஸ்ஸலாமு அழைக்கும் வ ரஹ்மத்துல்லாஹி வ பரக்காத்துஹூ

ரப்பி சித்னி இல்மன்

யா அல்லாஹ் எங்களது அறிவாற்றலை அதிகப்படுத்துவாயாக ..


நண்பர்களே முந்தய வரலாற்று பதிவில் இப்ராகீம் அலைஹி வசல்லம் அவர்களின் தனிப்பட்ட வரலாறுகளை கண்டோம் இன்றைய தினம் இன்ஷா அல்லாஹ் நபி இஸ்மாயில் அலைஹி வசல்லம் அவர்களை பற்றி காண விருக்கிறோம் . இவரை பற்றி அல்லாஹுத்தாலா நபி இப்ராஹீம் அலைஹி வசல்லம் அவர்களுடனே இணைத்தேதான் சொல்கிறான் . இந்த நபி இஸ்மாயில் அலைஹி வசல்லம் அவர்களை பற்றி அல்லாஹ் பொறுமையாளர் என்று சிலாகித்து சொல்கிறான் என்றால் எவ்வாறு இருந்திருக்க வேண்டும் இன்ஷா அல்லாஹ் இன்று இந்த இஸ்மாயில் அலைஹி வசல்லம் அவர்களின் வரலாறை  பார்போம் ,,

நபி இப்ராஹீம் அலைஹி வசல்லம் அவர்களுக்கு வயதாகியும் குழந்தை அல்லாஹ் அருளாதாதால் மிகவும் வேதனையுற்றார்கள்  மேலும் சாரா அம்மையாருக்கும் இத்தகைய வருத்தம் உண்டு ஒரு நாள் நபி இபுறாஹீம் அலைஹி வசல்லம் அவர்கள் அல்ல்ஹுவிடம் பிரத்தனை செய்தார்கள் அல்லாஹ் எனக்கு வாரிசுகளை கொடுப்பாயாக  என்று மனம் வருந்தி துஆ செய்து கொண்டிருந்தார்கள் அப்பொழுது சாரா அம்மையார் அவர்களை கண்டு மனம் வருந்தி அவர்களின் அடிமை பெண்ணானா அன்னை ஹாஜரா அம்மையாரை அவர்களுக்கு திருமணம் செய்துவைத்து நபியே என்னை அல்லாஹ் மலடாக்கிவிட்டான் என்பதுபோல் தெரிகிறது ஆதலால் இந்த பெண்ணின் மூலம் நீங்கள் குழந்தை பெற்றுகொல்லுங்கள் என்று கூறினார்கள் பிறகு அவ்வாறே அல்லாஹுவின் அருளோடு மூன்றாம் மாதத்திலேயே இஸ்மாயில் அலைஹி வசல்லம் அவர்கள் கருவில் உருவாஹி விட்டார்கள் இதனை கண்ட சாரா அமையார்  வேதனை பட்டுக்கொண்டார் நம்மால் குழந்தை ஈன்றெடுக்க இயலவில்லை என்று மேலும் அவர்களது பயம் நபி இப்ராஹீம் அலைஹி வசல்லம் அவர்கள் தம்மை வேருத்துவிடுவார்களோ என்றும் அஞ்சினார்கள் .இவ்வாறு இருக்க ஹாஜரா அம்மையார் மீது சிறிது கோவத்தோடு சாரா அம்மையார் இருப்பதை கண்டு ஹாஜரா அம்மையார் வருந்தி பிரத்தனை செய்து கொண்டிருந்தார்கள் அப்பொழுது அல்லாஹ் தனது மலக்கை அனுப்பி அவர்களிடம் ஒரு சுப செய்தி கூறினான்
அந்த மலக்குகள் ஹாஜரா அம்மையாரிடம் உமக்கு அழகான ஆன் குழந்தை பிறக்கும் அதற்கு இஸ்மாயில் என்ற பெயர் சூட்டு மேலும் இவரது சந்ததிகளை அல்லாஹ் மேன்மைபடுத்தி வைப்பான் மேலும் இவர்களது சந்ததிகளில் இருந்து பனிரெண்டு தலைவர்கள் உருவாகுவார்கள் என்ற சுப செய்தியையும் அவர்கள் கூறினார்கள் .
இந்த பனிரெண்டு தலைவர்கள் என்ற அந்த சுப செய்தி என்னுடைய சமுதாயத்தில் வருவார்கள் என்று நபி முஹம்மத் சள்ளள்ளஹு அலைஹி வசல்லம் அவர்கள் கூறி இருக்கிறார்கள் இந்த பனிரெண்டு தலைவர்கள் யார் என்பதில் பல கருத்து வேறுபாடுகள் மார்க்க அறிஞர்களுகிடையில் ஆனால் பல அறிஞர்கள் குறிப்பிடுகிறார்கள் இந்த பனி ரெண்டுபேரும் சகாபக்கல்தான் என்று அது 10 பேர் சொர்கத்துக்கு சுப செய்தி சொல்லப்பட்ட நபி தோழர்கள் மற்றொருவர் உமர் பின் அப்துல் அசீஸ்  அவர்கள் இன்னும் ஒருவரின் பெயர் ஹதீத் களில் குறிப்பிடப்படவில்லை என்று உலமாக்கள் கூறுகிறார்கள் . அனைத்தையும் அல்லாஹுவே அறிந்தவன்

இதனை அறிந்த ஹாஜரா அம்மையார் சந்தோசத்துடன் குழந்தையை பெற்றெடுத்தார்கள் அல்லாஹ் அப்பொழுது நபி இப்ராஹிம் அலைஹி வசல்லம் அவர்களிடம் கட்டளையிட்டான் நீர் உனது மனைவியையும் உன் பச்சிலன் குழந்தையையும் அல்லாஹுவின் போருத்த்திர்க்கான பூமியில் விட்டு வர கட்டளையிட்டான் அல்லாஹுஅக்பர் . அந்த சமயத்தில் அவரும் அல்லாஹுவின் கட்டளையை ஏற்று தனது மனைவியையும் தனது குழந்தையையும் அழைத்து புறப்பட்டார் . அந்த புனித இடமான மக்காவை வந்தடைந்ததும் அன்றைய தினம் கால்களும்  மண்ணுகளும் நிறைத்த பாலைவன பூமியாக காட்சியளித்தது . அங்கு யாரு கூடியில்லாத அந்த பாலைவனத்தில் அவர்களை விட்டு திரும்பினார்கள் அப்பொழுது ஹாஜரா அம்மையார் நபி இப்ராஹீமே எங்கு போறீர்கள் என்று கேட்டார்கள் அதற்கு அவர் எதுகுமே கூறவில்லை பிறகு ஹாஜரா அம்மையார் கேட்டார்கள் இது அல்லாஹுவின் கட்டளையா என்றதற்கு ஆம் என்று கூறினார்கள் நபி இபுராஹிம் அலைஹி வசல்லம் அவர்கள் அப்படியென்றால் அந்த ரப்புல் ஆலமீன் எங்களை ஒருபோதும் கைவிடமாட்டான் நீங்கள் கிளம்புங்கள் என்று கூறினார்கள் ஹாஜரா அம்மையார் ..
இத்தகைய ஈமான் யாருக்கு வரும் அல்லாஹு அக்பர்  . நபி இப்ராஹீம் அலைஹி வசல்லம் அவர்களும் அவர்களை கண்டுகொள்ளாமல் அல்ல்ஹுவின் கட்டளையை நிறைவேற்ற அவர் கிளம்பிவிட்டார் . நீண்ட துலைவில் சென்று திரும்பி பார்த்தார் பிறகு அல்லாஹுவிடம் பிரத்திதார் யா அல்லாஹ் எங்கள் ரட்சகனே நிச்சயமாக என்னுடைய சந்ததியினரை உன் பரிசுத்த விட்டிற்கு அருகில் விவசாயமில்ல அந்த பள்ளத்தாக்கில் குடியமர்த்திவிட்டேன் அவர்கள் உன் கட்டளையை நிறைவேற்றுவதற்காக உன்னுடைய தொழுகையை நிறைவேற்றுவதற்காக .. அதலால் எங்களுடை த்யாகத்தை நீ ஏற்றுக்கொண்டு  மனிதர்களின் மனங்களை அந்த இடத்தில் அவர்களின் தாகத்தின் பக்கம்  நீ புகுத்துவாயாக மேலும் அவர்கள் அங்கு உனக்கு நன்றி செலுத்தும்  அவர்களுக்கு பற்பல கனி வரகங்களை அவர்களுக்கு நீர் வழங்குவாயாக ..

அல்லாஹு அக்பர் எவ்வளவு பெரிய துஆ மாஷா அல்லாஹ் இன்று இந்த துஆ  உண்மையாக அரங்கேறி கொண்டிருக்கிறது என்பதை நீங்களே புரிந்திருப்பீர்கள் ஏன் என்றால்  முஸ்லிம்களாக உள்ள ஒவ்வொரு மனிதரும் எப்பொழுது அல்லாஹுவின் வீட்டிற்கு போவோம் என்று காத்துக்கொண்டிருக்கிறார்கள் .. கடுகளவு ஈமான் உள்ள ஒரு அடியான்கூட இதற்கு ஆசை படுவான் மாஷா அல்லாஹ்  மேலும் மாற்று மத சகோதரர்கள் கூட இதற்கு ஆசைபடுகிறார்கள் நீங்கள் கேள்விபட்டிருப்பீர்கள்  அனைத்து வழிபட்டு தடங்களில் அனுமதி உள்ளது ஆனால் மக்காவில் மட்டும் அதனை காண ஏன் அனுமதிக்க மறுக்கிறீர்கள் என்று இது நமது நாயகத்தின்  கட்டளை . அதனை அல்லாஹ் நிறைவேற்றிகொண்டிருகிறான் என்பதே உண்மை என் என்றால் இன்றைய சவ்தி அரேபியாவின் நிலவரம் அனையவரும் அறிந்ததே எவர்கள் நம் சமூகத்திற்கு எதிரிகளோ அவர்களை அந்த  சவ்தி அரசு தங்களுக்கு பாதுகாப்பு என்று அவர்களது படையை அவர்களது நாட்டுக்குள் புகுத்தியுள்ளார்கள் அவர்களுக்கு ஹராமான அணைத்து வசதிகளும் அரசே பொருப்பெர்ற்று வழங்கிகொண்டிருக்கிறது சவ்தி நாட்டில் மது அனுமதி இல்லை ஆனால் அவர்களுக்கு அனுமதிக்கப்பட்டது விபச்சாரம் அனுமதி இல்லை ஆனால் அவர்களுக்கு அரசே அதற்கு உதவுகிறது . அல்லாஹ் பாதுகாப்பானாக .. ஆதலால் இவர்கள் ஒன்னும் நபி பெருமான் சள்ளள்ளஹு அலைஹி வசல்லம் அவர்களது கட்டளையை ஏற்று நடப்பவர்கள் என்பதாய் எண்ணி விட வேண்டாம் மாஷா அல்லாஹ் அல்லாஹ் பாதுகாத்த நல்ல மூமின்கலும் இந்த இடத்தில் வாழத்தான் செய்கிறார்கள் .. ஆதனால்தான் கூறுகிறேன் அல்லாஹுதான்  அவனின்  வீட்டையும் அவனது ரசூலான முஹம்மத் சள்ளள்ளஹு அலைஹி வசல்லம் அவர்களது உறங்கும் இடத்தையும் பாதுகாக்கிறான் .

இவ்வாறு நபி இப்ராஹிம் அலைஹி வசல்லம் அவர்கள்  பிராத்தனை செய்தார்கள் , சிறிது நேரத்தில் இஸ்மாயில் அலைஹி வசல்லம் அவர்கள் பச்சிளம் குழந்தை பசியால் அளதுடங்கிவிட்டர்கள் . அதனை கண்ட ஹாஜரா அம்மையார் அவர்களுக்கு பால் சுரக்க வில்லை அவர்களும் பசியால் வாடிக்கொண்டிருக்கிறார்கள் மேலும் எங்காவது நீர் இருந்தால் அதனை அருந்தி அதன் மூலம் பால் சுரக்கும் என்று எண்ணி நபி இஸ்மாயில் அலைஹி வசல்லம் அவர்களை காபாவிற்கு பத்தடி தூரத்தில் வைத்துவிட்டு அவர்கள் சவா என்ற மலை மீது ஏறினார்கள் ஒரு குறிப்பிட்ட சில தூரத்தில் மர்வா என்ற இன்னொரு மலை இருக்கிறது அதன் மேல் நீர் இருப்பது போல் " கானல் நீர் " தெரிகிறது ஆதலால் அவர்கள் அந்த மலைக்கு ஓடுகிறார்கள் பிறகு அந்த  மர்வா என்ற மலையில் ஏறி பார்த்தால் சவா மலையில் கானல் நீர் தெரிகிறது இப்படியே ஏழு முறை அங்கும் இங்கு ஒடுக்ரார்கள் அல்லாஹு அக்பர் அல்லாஹ் இந்த த்யாகத்தை க்யாமத் நாள் வரை வரும் மக்கள் நம் ஹாஜரா அம்மையார் பட்ட வேதனையை உணரவேண்டும் என்பதற்காக அல்லாஹ் சவா மர்வா இடையில் தொங்கோட்டம் என்ற ஒரு விதியையே ந்யேமித்திருக்கிறான் . அங்கு ஓடும்பொழுது இரு மலைகளுக்கும்  இடைப்பட்ட இடத்தில இப்பொழுது அடையாளத்திற்காக  பச்சை விளக்கு போருத்தியிருக்கார்கள் இந்த பச்சை விளக்கு எரியும் இடத்தில் மட்டும் ஆண்கள் கொஞ்சம் வேகமாக ஓடுவது சுன்னத் . ஏன் என்றால் அந்த பச்சை விளக்கு பகுதியில் இருந்து பார்த்தால் காபத்துல்லாஹ் அப்படியே தெரியும் ஹாஜரா அம்மையார் தனது மகன் இஸ்மாயிலை காபாவிற்கு அருகில் விட்டுவிட்டு ஓடிகொண்டிருண்டார்கள் அவர்கள் இந்த பச்சைவிளக்கு பகுதிக்கு வரும்பொழுது தனது பிள்ளை அழுவதை கண்டதும் வேகமாக ஓடுவார்கள் சிறிது தூரத்தில் காபா மறைந்து விடும் அதன் பிறகு மெதுவாக ஓடினார்கள் என்று நபி முஹம்மத் சள்ளள்ளஹு அளஹி வசல்லம் அவர்கள் கூறியதாக மார்க்கா அறிஞர்கள் குறிப்பிடுகிறார்கள் .

இவ்வாறு ஹாஜரா அம்மையார் ஏழு முறை இங்கும் அங்கும் ஓடி கொண்டிருந்தார்கள் அல்லாஹ் இவர்களை விட்டுவிடுவான அல்ல்ஹுவை விட கருணையாளன் யார் . அல்லாஹ் தனது குதுரத்தால்  இஸ்மாயில் அலைஹி வசல்லம் அவர்கள் தனது காலால் தரையில் அடிக்க ஒரு ஊற்று கிளம்பி வெளியே வந்தது இதனை கண்ட ஹாஜரா அம்மையார் அங்கு வந்து தண்ணீரை அருந்தி பிறகு நாளை வேண்டும் என்பதற்காக மண்ணை வைத்து அணைபோல் கட்டி  "ஜம் ஜம்"   என்று கூறினார்கள் மார்க்க  அறிஞர்கள் குறிப்பிடுகிறார்கள் ஜம் ஜம் என்றால் ஹிப்ரு மொழியில் நில் நில் என்று அர்த்தம் என்பதாக . இந்த சம்பவத்தை நமது கண்மணி நாயகம் சள்ளல்ல்ஹு அலைஹி வசல்லம் அவர்கள் கூறியதாக மார்க்க அறிஞ்சர்கள் குறிப்பிடுகிறார்கள் " இஸ்மாயிளுடைய தாயிற்கு அல்லாஹ் ரஹ்மத் செய்யட்டும் அன்றையதினம் மட்டும் ஹாஜரா அம்மையார் ஜம் ஜம் என்று கூற வில்லை என்றால் இன்றைய தினம் உலகம் முழுவதும் இந்த நீர் வற்றாத ஜீவநதியாக ஓடிக்கொண்டிருக்கும்  என்று . மாஷா அல்லாஹ் உங்களை நீங்களே கேட்டுகொல்லுங்கள் இன்று ஜம் ஜம் நீர் குடிக்காத ஒரு முஸ்லீமாவது இருக்க முடியுமா ஒரு சிறிய ஊற்றின் மூலம் உலகத்திற்கே அல்லாஹ் தந்து அத்தாட்ச்சியான ஜம் ஜம் நீரை கொடுத்துக்கொண்டிருக்கிறான் .
 மாஷா அல்லாஹ் இவ்வாறு தனது தாகத்தையும் தனது பிள்ளையின் பசியையும் அடைத்துவிட்டு மேலும் காபத்துல்லாவின் அறிகிலே ஒரு சிறு கூடாரம் கட்டி அங்கு தங்கி இருக்கிறார்கள் தாயும் பிள்ளையும் மேலும் அவர்கள் இருக்கும் இடத்திற்கு அருகில் பறவைகள் சுற்றுவதை கண்டு ஜுருஹூம் என்ற வியாபாரக் கூட்டம் ஹாஜரா அம்மையாரிடம் இங்கு தங்கிக்கொள்ளலாம என்று கேட்டார்கள் அதற்க்கு தாராளமாக தங்கிகொல்லுங்கள் என்று சொன்னவுடன் சிறுக சிறுக மக்கள் வர வர அந்த பாலைவனமாக இருந்த  பகுதி ஒரு சிறிய ஊரை போல் மாறுகிறது .
பிறகு சிறிது காலம் அங்கு தங்கி இருந்தார்கள் பிறகு சில காலம் கழித்து இப்ராஹிம் அலைஹி வசல்லம் அவர்கள் தனது குடும்பத்தை காண மக்காவிற்கு வந்தார்கள் அப்பொழுது இஸ்மாயில் அலைஹி  வசல்லம் அவர்கள் வாலிபத்தை அடைந்த நிலையில் தன் தந்தையின் பணியில் ஒத்துழைக்கும் அளவிற்கு அறிவுடையவராக இருதார்கள் மேலும் அன்றைய இரவு அங்கேயே தங்கி இருந்தார்கள் இபுறாகீம் அலைஹி வசல்லம் அவர்கள் . மேலும் அவர் காலையில் தனது மகன் இஸ்மாயில் அலைஹி வசல்லம் அவர்களை அழைத்து மகனே நான் உன்னை அறுத்து பலியிடுவதை போன்று கனவு கண்டேன் உன்னுடைய அபிப்ராயம் என்ன என்று தனது மகனிடம் கேட்டார் . நாமாக இறந்தால் என்ன செய்திருப்போம் என்பதை உங்கள் கேள்விக்கே விட்டுவிடுகிறேன் அனால் நமது தந்தை இஸ்மாயில் அலைஹி வசல்லம் அவர்கள் கூறிய வார்த்தை  என் அருமை தந்தையே நீங்கள் உங்களுக்கு ஏவப்பட்டதை நிறைவேற்றுங்கள் அல்லஹ்வின் அருளால் நிச்சயமாக நீங்கள் என்னை பொருமையாலராகவே காண்பீர்கள் என்று கூறினார்

மேலும் நபி இப்ராஹீம் அலைஹி வசல்லம் அவர்கள் தன் மகனை குப்புற படுக்கவைத்து கத்தியை வைத்து அறுக்க முற்பட்டார் அப்பொழுது அல்லாஹ் கூறுகின்றான் தனது திருமறையில் அப்பொழுது இப்ராகிமை நாம் அழைத்தோம் இப்ராஹீமே நிச்சயமாக நீர் உம் கனவை உண்மையாக்கி விட்டீர் நிச்சயமாக நன்மை செய்வோருக்கு இவ்வாரே நாம் கூலி தருகிறோம் மேலும் அல்லாஹ் கூறினான் நிச்சயமாக இதுவே தெளிவான  பெரும் சோதனையாகும் என்று கூறினான் மேலும் இதற்க்கு பகரமாக நபி இப்ராஹீமுக்கு அல்லாஹ் ஒரு ஆட்டை கொடுத்து இதனை அல்லாஹ்விர்காகா குர்பானி செய்வீராக என்று கூறினான் மாஷா அல்லாஹ் இவ்வளவு த்யாகங்கள் அல்லாஹ் அதனால் தான் நபி இபுறாஹீம் அலைஹி வசல்லம் அவர்களை ஹலீளுல்லாஹ் அல்ல்ஹுவின் நேசராக ஏற்றுகொண்டான்

மேலும் சிறிது காலம் கழித்து அல்லாஹ் மேலும் ஒரு கட்டளை பிறப்பித்தான் நபி இப்ராஹீமே காபத்துல்லாஹ்வை உயர்த்தி கட்டுவாயாக என்று மேலும் நபி இப்ராஹீம் அலைஹி வசல்லம் அவர்கள் இஸ்மாயில் அலைஹி  வசல்லம் அவர்களிடம் என் அருமை மகனே நான் அல்லாஹுவின் பள்ளியை கட்ட்விருக்கிறேன் எனக்கு உதவி செய்வாய என்று கேட்டார் அதற்கு நபி இஸ்மாயில் அலைஹி வசல்லம் அவர்கள் நிச்சயமாக  தந்தையே நானும் உங்களுக்கு உதவுகிறேன் மேலும் இருவரும் சேர்ந்து காபதுல்லாஹுவை  கட்ட தொடங்கினார்கள் சிறிது  உயரம் ஆக நபி இப்ராகீம் அலைஹி வசல்லம் அவர்கள் ஒரு கல்லின் மீது ஏறி நின்று காபதுல்லாவை உயர்த்தினார்கள்  அந்த கல் கபதுல்லாஹ் உயர உயர அவருக்கு அந்த கல்லும் உயர்துகொண்டே போனதாக அல்லாஹ் இவ்வாறு நபி இப்ராஹீமுக்கு உதவி செய்ததாக உலமாக்கள் குறிப்பிடுகிறார்கள் இந்த கல்தான் மக்காமு இபுறாஹீம் என்று காபதுல்லாஹுவில் ஒரு கூண்டிற்குள் வைக்கப்பட்டிருக்கிறது   மேலும் சிறிது நேரம் கழித்து நபி இஸ்மாயில் அலைஹி  வசல்லம் அவர்கள் தந்தையே எனக்கு மிகவும் சோர்வாக இருக்கு சிறிது நேரம் கழித்து நான் கல் எடுத்து தருகிறேன் என்று கூறி உக்கந்துவிட்டர்கள்
மேலும் நபி இப்ராஹீம் அலைஹி வசல்லம் அவர்கள் அதனை கண்டுகொள்ளாமல் கல்லுதா மகனே என்று கேட்க ஜிப்ரஹீல் அலைஹி வசல்லம் அவர்கள் ஹஜ்ரத் அஸ்வத் கல்லை கொடுத்தார்கள் சிறிது நேரம் கழித்து இஸ்மாயில் அலைஹி வசல்லம் அவர்கள் கேட்டார்கள் தந்தையே இந்த கல்லை எடுத்து தந்தது யார் என்று வினவியபொழுது சோர்வடையாத ஒருவர் தந்தார் என்று நபி இப்ராஹீம் அலைஹி வசல்லம் கூறுகிறார்
மேலும் இந்த ஹஜ்ரத் அஸ்வத் கல்லை  பற்றி பெருமானார் முஹம்மத் சல்லல்லாஹு அலைஹி வசல்லம் அவர்கள் கூறினார்கள் இந்த ஹஜ்ரத் அஸ்வத் கல் சொர்கத்தில் இருந்து வந்த கல் இது நபி இபுராஹிம் அலைஹி வசல்லம் காலத்தில் வெள்ளையாக பலுங்கி கர்க்களைபோன்று இருந்தது என்று கூறியதாக உலமாக்கள் கூறுகிறார்கள் மேலும் இந்த கல்லை முத்தமிடுவது சுன்னத் ஆனால் ஹஜ்ரத் அஸ்வத் கல்லுக்கு ஏதாவது சக்தி உண்ட என்றால் இதற்கு மேலும் ஒரு ஹதீதே சான்றாக இருக்கும் உமர் ரலி அல்லாஹு தாள அவர்கள் அந்த ஹஜ்ரத் அஸ்வத் கல்லை  முத்தமிடும் முன் பிஸ்மில்லாஹி அல்லாஹு அக்பர் என்று கூறி ஹஜ்ரத் அஸ்வதே நீ ஒரு கல்லை தவிர வேறு ஒன்றும் இல்லை உன்னை நான் முத்தமிட காரணம் எனது ரசூல் முஹம்மத் சல்லல்லாஹு அலைஹி வசல்லம் அவர்கள் உன்னை முத்தமிட்டதால் மட்டுமே அல்ல்ஹுவின் ரசூல் உன்னை முத்தமிடாமல் காலால் வைத்து மிதிதிருந்தால் நாங்களும் உன்னை காலால் தான் மிதிதிருப்போம் . என்று கூறினார்கள் அல்லாஹு அக்பர் .
      மேலும் இப்ராஹீம் அலைஹி வசல்லம் அந்த பள்ளியை இப்பொழுது இருக்கு காபாவைபோல்  வடிவமைக்க வில்லை அவர் வடிவமித்த தோற்றம் அங்கு நீங்கள் போயிருந்தால் பார்த்திருக்கலாம் ஒரு பக்கம் மட்டும் வட்டவடிவில் அடைத்து வைத்திருப்பார்கள் மூன்று பக்கம் கட்ட வடிவில் ஒருபக்கம்  மட்டும் வட்டவடிவில்தான் நபி இபுறாஹீம் அலைஹி வசல்லம் அவர்கள் வடிவமைத்தார்கள் . இந்த சம்பவத்தை தொடர்ந்து ஒரு ஹதீதை உலமாக்கள் குறிப்பிடுகிறார்கள் நபி சள்ளள்ளஹு அலைஹி வசல்லம் அவர்கள் அன்னை ஆயிசா ரலியல்லாஹு அன்ஹும் அவர்களிடம் இந்த மக்கள் மட்டும் இஸ்லாத்திற்கு  புதியவர்களாக இல்லாமல் இருந்தால் நான் நபி இபுறாஹீம் அலைஹி வசல்லம் அவர்கள் கட்டியவாறே   கட்டியிருப்பேன்  என்று கூறினார்கள் மேலும் இதனை அப்துல்லாஹ்  இப்னு ஜுபைர் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் மக்காவை ஆட்சி செய்யும்பொழுது இதனை ஆயிஷா ரல்யள்ளஹு தெரிவித்ததாக அதன்படி வடிவமைத்ததாகவும் மேலும் அதன் பின் ஆட்சிக்கு வந்த ஹஜ்ஜாஜ் இப்னு யூசுப் என்ற ஆட்சியாளன் அப்துல்லாஹ் இப்னு ஜுபைர் ரலியல்லாஹுதால அவர்கள் மீது உள்ள வெறுப்பால் அதனை பழையபடியே கட்டமான வடிவில் மீண்டும் இடித்து கட்டினார் என்று உலமாக்கள் கூறுகிறார்கள் அன்றிலிருந்து இன்றுவரை அப்படியே உள்ளது

மேலும்  இவ்வாறு அவர்களது இந்த பணியை முடித்துவிட்டார்கள்  முடித்தவுடன் அல்லாஹ் கூருக்றான் நீங்கள் மக்களை ஹஜ் செய்வதற்காக அழையுங்கள் என்று உத்தரவிட்டான் அதன் படி நபி இபுறாஹீம் அலைஹி வசல்லம் அவர்கள் ஹஜ்ஜுக்கு வாருங்கள் ஹஜ்ஜுக்கு வாருங்கள் என்று நாலா பக்கமும் அழைத்தார்கள்  இதன் தொடர்ச்சியில் உலமாக்கள் கூறுகிறார்கள் அல்ல்ஹுவின் ரசூல் முஹம்மத் சள்ளள்ளஹு அலைஹி வசல்லம் அவர்கள் கூறிய இந்த வார்த்தைக்கு எத்தனை  பேர் பித்தலங்களாக இருக்கும் நிலையில் லப்பைக் என்று கூறினார்களோ அத்தனை  முறை அவர்கள் ஹஜ்ஜ் செய்வார்கள் என்பதாக ...

மேலும் இந்த பணியை முடித்தவுடன் நபி இப்ராஹீம் அலைஹி வசல்லம் அவர்களும் இஸ்மாயில் அலைஹி வசல்லம் அவர்களும் அல்ல்ஹுவிடம் எங்கள் ரட்சகனே எங்களது இந்த பணியை நீ முழுமையா ஏற்றுகொல்வாயாக மேலும் நீயே அனைத்தையும் செவி ஏற்ப்பவன் நன்கரிதவன் என்றும்
மேலும் எங்கள் ரட்சகனே எங்களில் இருந்து எங்கள் சந்ததிகளில் ஒரு கூட்டத்தினரை உனக்கு கீல்படிபவர்களாக ஆக்கி வைப்பாயாக மேலும் எங்களுடைய தவ்பாவை  ஏற்றுக்கொள்வாயாக  மேலும் நிச்சயமாக நீயே தவ்பாவை ஏற்பவன் மிக்க கருணையுடையவன்

மேலும் எங்கள் ரட்சகனே எங்கள்  சந்ததிகளில் இருந்து ஒரு தூதரை அனுப்புவாயாக அவர்கள் மக்களுக்கு உன்னுடைய வசனங்களை ஓதி காண்பித்து வேதத்தையும் அறிவையும் (குரானின் விளக்கமான சுன்னத்தையும் ) மேலும் அவர்களை பரிசுத்தமும் படுத்துவார் நிச்சயமாக நீயே தீர்க்கமான அறிவுடையவன் என்று பிராத்தித்தார் இந்த பிராத்தனை யாருக்காக நமது முஹம்மத் சல்லாஹு அலைஹி வசல்லம் அவர்களுக்காக பிராத்தனை செய்தார்கள் அவர்கள்தான் மக்களுக்கு குரானை ஒதிகன்பிதார் மேலும் தனது வாழ்வையே குரானுக்கு விளக்கமாக வாழ்ந்து காண்பித்தார் மேலும் அவர்களது தோழர்களான சஹாபாக்களை வேதத்தையும் அறிவையும் கற்று காட்டுமிராண்டிகளாக இருந்தவர்களை உலக மக்களுக்கே முன் உதாரணமாக மாற்றினார்கள் மாஷா அல்லாஹ் ...
மேலும் அல்லா கூறுகிறான் தன்னை தானே மடையனாக்கியவனை தவிர   இப்ராஹிமுடைய மார்கத்தை புறக்கணிப்பவன் யார்? நிச்சயமாக நாம் இவரை இவ்வுலகில் தேர்வு செய்தோம் மறுமையில் இவர் நல்லோருடன் உள்ளவராவார்
மேலும் அல்லாஹ் நபி இப்ராஹிமிடம் நீர் எனக்கு கீழ்படியும் என்று கூறியபொழுது அவர் அகிலத்தாரின் இரட்சகனுக்கு நான் கீல்படிந்த்துவிட்டேன் . என கூறினார்

மேலும் நபி இப்ராஹீமும் அவரது மகன் இஸ்மாயில் அலைஹி வாசலாம் மற்றும் அவர்களது குடும்பம் செய்த த்யாகத்தை நினைத்துதான் நாம் த்யாகத்திருநாள் என்று ஒரு பெருநாள் கொண்டாடிகொண்டிருக்கிரோம் மேலும் அந்நாளில் உலகமக்கள் ஹஜ்ஜுக்காக படையெடுக்கும் கட்சி அல்ஹம்துலில்லாஹ்  கண்ணுக்கு விருந்தாய் காட்சியளிக்கும் மேலும் அல்ல்ஹுவின் வீட்டிற்க்கு போக ஒவ்வொரு முஸ்லீமின் மனமும் ஏங்கி கொண்டே  இருக்கும்.

நபி இஸ்மாயில் அலைஹி வசல்லம் அவர்களது  சந்ததிகளில்  வந்த ஒரே நபி நபி முகம்மது சள்ளள்ளஹு அலைஹி வசல்லம்  அவர்கள் மட்டுமே இதனால்தான் யூதர்களும் கிறிஸ்துவர்களும் இப்ராஹிம் அலைஹி வசல்லம் அவர்களுக்கு இஸ்மாயில் என்ற மகன் இருந்ததையே   மறைக்கிறார்கள் மேலும் சிலபேர் இஸ்மாயில் என்ற மகன் இருதார் ஆனால் அறுத்து பலியிட துணிந்தது இஸ்மாயிலை(அலைஹி வசல்லம்) இல்லை இஷ்ஹாக்  அலைஹி வசல்லம் அவர்களை இன்ஷா அல்லா அடுத்த பதிவில் இஷ்ஹாக் அலைஹி வசல்லம் அவர்களின்  வரலாறில் உங்களுக்கு புரியவரும் இந்த சம்பவத்தை பற்றி நபி முஹம்மத் சல்லல்லாஹு  அலைஹி வசல்லம் அவர்கள் கூறுகிறார்கள் நான் அறுத்து பலியிடதுணிந்த இரு தந்தையின் மகனாக இருக்கிறேன் என்று . ஒருவர் இஸ்மாயில் அலைஹி வசல்லம் அவர்கள் மற்றும் ஒருவர் நாயகம் சல்லல்லாஹு அலைஹி வசல்லம் அவர்களின் தந்தை அப்துல்லாஹ்  என்று குறிப்பிடுவார்கள் ..

மாஷா அல்லா இன்றைய தினம் நபி இஸ்மாயில் அலைஹி வசல்லம் அவர்களின்  சுருக்கமான வரலாறை நாம் கண்டோம் இன்ஷா அல்லாஹ் அடுத்த  பதிவில் நபி  இஷ்ஹாக் அலைஹி  வசல்லம் அவர்களை பற்றி இன்ஷா அல்லா காண்போம்
இதில் எனக்கு அறியாத பல சம்பவங்கள் உள்ளது என்பதே உண்மை ஆதலால் நாம் நம் வரலாறுகளை தேட முற்படுவோம் . இல்லையென்றால் நம் சுய அடையாளத்தை தொலைத்து வெறும் ஜடமாக வாழும் நிலைமை ஏற்பட்டாலும் அச்சரியம் இல்லை ஏன் என்றால் இன்றைய இந்திய முஸ்லீம்களின் நிலை அதுதான்


யா அல்லாஹ் நாங்கள் எதனை அறிய முற்பட்டோமோ அதனை எங்களுக்கு மேலும் மேலும் தெளிவு படுத்துவாயாக ஆமீன்
யா அல்லாஹ் எங்களுக்கு வலுவான ஈமானை வழங்குவாயாக  ஆமீன்
யா அல்லாஹ் எங்களுக்கு இந்திய முஸ்லீம்களுக்கும் பாலஸ்தீனில் உன்னுடைய எதிரிகளான யூத நாசராநிகளிடம்  போர் புரியும் என் தாய்ம்மார்கள் தந்தைமார்கள் என் சகோதரிகள் என் சகோதரர்கள் மேலும் என் சொந்தம்மான பிஞ்சிலேயே உனக்காக சஹீத் என்னும் உயர் அந்தஸ்திற்காக  போராடிக்கொண்டிருக்கும் குழந்தைகள் மேலும் காஸ்மீரில் இராக்கில் சிரியா வில் பர்மாவில் அஸ்ஸாமில் குஜராத்தில்  போன்ற உலகம் முளுவதும் உன் தீனுக்காக போராடிக்கொண்டிருக்கும் அனைத்து சகோதரர்களுக்கும் வெற்றியை வழங்குவாயாக . ஆமீன் அவர்களையும் அவர்களின் உடமைகளையும் பாதுகாப்பாயாக ஆமீன்
எங்களை யூத நாசராநிகளின் மற்றும் சைத்தானின் சூழ்ச்சிகளில் எங்களை பாதுகாப்பாயாக ஆமீன்
மரணிக்கும் பொழுது முஸ்லீமாக மரணிக்கும் பாக்கியத்தை தந்தருள் வாயாக  ஆமீன் ஆமீன் யா ரப்பல் ஆலமீன்

இன்ஷா அல்லாஹ் எதை  தெரிந்துகொண்டோமோ அதன் படி  அமல் செய்யும் தௌபிக்கை அல்லாஹ் தண்டருல்வானாக ஆமீன்
யா அல்லாஹ் குரானுடன் எங்கள் அனைவரையும் தொடர்பு படுத்துவாயாக ஆமீன் யா ரப்பல் ஆலமீன்

நண்பர்களே படித்து உங்களது நண்பர்குக்கு இந்த பதிவுகளை பற்றி எத்தி வையுங்கள் அவர்களை இந்த பக்கத்தில் இனைய வேண்டுகோள் விடுங்கள் அல்லாஹ்  ரக்மதுசெய்வானாக ஆமீன் ஆமீன் யா ரப்பல் ஆலமீன்

வாஹிர்தவான அல்ஹம்துலில்லாஹி  ரப்பில்  ஆலமீன்

அஸ்ஸலாமு அழைக்கும் வ ரஹ்மத்துல்லாஹி வ பரக்காத்துஹு 


0 comments:

Post a Comment