This is default featured slide 1 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

This is default featured slide 2 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

This is default featured slide 3 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

This is default featured slide 4 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

This is default featured slide 5 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

Wednesday, March 27, 2013

நபி இஸ்மாயில் அலைஹி வசல்லம் அவர்களது வரலாறு


பிஸ்மில்லாகிர் ரஹ்மானிர் ரஹீம்

" அளவற்ற அருளாளன் நிகரற்ற அன்புடையோன் அல்லாஹுவின் திரு பெயரால் ஆரம்பம் செய்கிறேன் "

அஸ்ஸலாமு அழைக்கும் வ ரஹ்மத்துல்லாஹி வ பரக்காத்துஹூ

ரப்பி சித்னி இல்மன்

யா அல்லாஹ் எங்களது அறிவாற்றலை அதிகப்படுத்துவாயாக ..


நண்பர்களே முந்தய வரலாற்று பதிவில் இப்ராகீம் அலைஹி வசல்லம் அவர்களின் தனிப்பட்ட வரலாறுகளை கண்டோம் இன்றைய தினம் இன்ஷா அல்லாஹ் நபி இஸ்மாயில் அலைஹி வசல்லம் அவர்களை பற்றி காண விருக்கிறோம் . இவரை பற்றி அல்லாஹுத்தாலா நபி இப்ராஹீம் அலைஹி வசல்லம் அவர்களுடனே இணைத்தேதான் சொல்கிறான் . இந்த நபி இஸ்மாயில் அலைஹி வசல்லம் அவர்களை பற்றி அல்லாஹ் பொறுமையாளர் என்று சிலாகித்து சொல்கிறான் என்றால் எவ்வாறு இருந்திருக்க வேண்டும் இன்ஷா அல்லாஹ் இன்று இந்த இஸ்மாயில் அலைஹி வசல்லம் அவர்களின் வரலாறை  பார்போம் ,,

நபி இப்ராஹீம் அலைஹி வசல்லம் அவர்களுக்கு வயதாகியும் குழந்தை அல்லாஹ் அருளாதாதால் மிகவும் வேதனையுற்றார்கள்  மேலும் சாரா அம்மையாருக்கும் இத்தகைய வருத்தம் உண்டு ஒரு நாள் நபி இபுறாஹீம் அலைஹி வசல்லம் அவர்கள் அல்ல்ஹுவிடம் பிரத்தனை செய்தார்கள் அல்லாஹ் எனக்கு வாரிசுகளை கொடுப்பாயாக  என்று மனம் வருந்தி துஆ செய்து கொண்டிருந்தார்கள் அப்பொழுது சாரா அம்மையார் அவர்களை கண்டு மனம் வருந்தி அவர்களின் அடிமை பெண்ணானா அன்னை ஹாஜரா அம்மையாரை அவர்களுக்கு திருமணம் செய்துவைத்து நபியே என்னை அல்லாஹ் மலடாக்கிவிட்டான் என்பதுபோல் தெரிகிறது ஆதலால் இந்த பெண்ணின் மூலம் நீங்கள் குழந்தை பெற்றுகொல்லுங்கள் என்று கூறினார்கள் பிறகு அவ்வாறே அல்லாஹுவின் அருளோடு மூன்றாம் மாதத்திலேயே இஸ்மாயில் அலைஹி வசல்லம் அவர்கள் கருவில் உருவாஹி விட்டார்கள் இதனை கண்ட சாரா அமையார்  வேதனை பட்டுக்கொண்டார் நம்மால் குழந்தை ஈன்றெடுக்க இயலவில்லை என்று மேலும் அவர்களது பயம் நபி இப்ராஹீம் அலைஹி வசல்லம் அவர்கள் தம்மை வேருத்துவிடுவார்களோ என்றும் அஞ்சினார்கள் .இவ்வாறு இருக்க ஹாஜரா அம்மையார் மீது சிறிது கோவத்தோடு சாரா அம்மையார் இருப்பதை கண்டு ஹாஜரா அம்மையார் வருந்தி பிரத்தனை செய்து கொண்டிருந்தார்கள் அப்பொழுது அல்லாஹ் தனது மலக்கை அனுப்பி அவர்களிடம் ஒரு சுப செய்தி கூறினான்
அந்த மலக்குகள் ஹாஜரா அம்மையாரிடம் உமக்கு அழகான ஆன் குழந்தை பிறக்கும் அதற்கு இஸ்மாயில் என்ற பெயர் சூட்டு மேலும் இவரது சந்ததிகளை அல்லாஹ் மேன்மைபடுத்தி வைப்பான் மேலும் இவர்களது சந்ததிகளில் இருந்து பனிரெண்டு தலைவர்கள் உருவாகுவார்கள் என்ற சுப செய்தியையும் அவர்கள் கூறினார்கள் .
இந்த பனிரெண்டு தலைவர்கள் என்ற அந்த சுப செய்தி என்னுடைய சமுதாயத்தில் வருவார்கள் என்று நபி முஹம்மத் சள்ளள்ளஹு அலைஹி வசல்லம் அவர்கள் கூறி இருக்கிறார்கள் இந்த பனிரெண்டு தலைவர்கள் யார் என்பதில் பல கருத்து வேறுபாடுகள் மார்க்க அறிஞர்களுகிடையில் ஆனால் பல அறிஞர்கள் குறிப்பிடுகிறார்கள் இந்த பனி ரெண்டுபேரும் சகாபக்கல்தான் என்று அது 10 பேர் சொர்கத்துக்கு சுப செய்தி சொல்லப்பட்ட நபி தோழர்கள் மற்றொருவர் உமர் பின் அப்துல் அசீஸ்  அவர்கள் இன்னும் ஒருவரின் பெயர் ஹதீத் களில் குறிப்பிடப்படவில்லை என்று உலமாக்கள் கூறுகிறார்கள் . அனைத்தையும் அல்லாஹுவே அறிந்தவன்

இதனை அறிந்த ஹாஜரா அம்மையார் சந்தோசத்துடன் குழந்தையை பெற்றெடுத்தார்கள் அல்லாஹ் அப்பொழுது நபி இப்ராஹிம் அலைஹி வசல்லம் அவர்களிடம் கட்டளையிட்டான் நீர் உனது மனைவியையும் உன் பச்சிலன் குழந்தையையும் அல்லாஹுவின் போருத்த்திர்க்கான பூமியில் விட்டு வர கட்டளையிட்டான் அல்லாஹுஅக்பர் . அந்த சமயத்தில் அவரும் அல்லாஹுவின் கட்டளையை ஏற்று தனது மனைவியையும் தனது குழந்தையையும் அழைத்து புறப்பட்டார் . அந்த புனித இடமான மக்காவை வந்தடைந்ததும் அன்றைய தினம் கால்களும்  மண்ணுகளும் நிறைத்த பாலைவன பூமியாக காட்சியளித்தது . அங்கு யாரு கூடியில்லாத அந்த பாலைவனத்தில் அவர்களை விட்டு திரும்பினார்கள் அப்பொழுது ஹாஜரா அம்மையார் நபி இப்ராஹீமே எங்கு போறீர்கள் என்று கேட்டார்கள் அதற்கு அவர் எதுகுமே கூறவில்லை பிறகு ஹாஜரா அம்மையார் கேட்டார்கள் இது அல்லாஹுவின் கட்டளையா என்றதற்கு ஆம் என்று கூறினார்கள் நபி இபுராஹிம் அலைஹி வசல்லம் அவர்கள் அப்படியென்றால் அந்த ரப்புல் ஆலமீன் எங்களை ஒருபோதும் கைவிடமாட்டான் நீங்கள் கிளம்புங்கள் என்று கூறினார்கள் ஹாஜரா அம்மையார் ..
இத்தகைய ஈமான் யாருக்கு வரும் அல்லாஹு அக்பர்  . நபி இப்ராஹீம் அலைஹி வசல்லம் அவர்களும் அவர்களை கண்டுகொள்ளாமல் அல்ல்ஹுவின் கட்டளையை நிறைவேற்ற அவர் கிளம்பிவிட்டார் . நீண்ட துலைவில் சென்று திரும்பி பார்த்தார் பிறகு அல்லாஹுவிடம் பிரத்திதார் யா அல்லாஹ் எங்கள் ரட்சகனே நிச்சயமாக என்னுடைய சந்ததியினரை உன் பரிசுத்த விட்டிற்கு அருகில் விவசாயமில்ல அந்த பள்ளத்தாக்கில் குடியமர்த்திவிட்டேன் அவர்கள் உன் கட்டளையை நிறைவேற்றுவதற்காக உன்னுடைய தொழுகையை நிறைவேற்றுவதற்காக .. அதலால் எங்களுடை த்யாகத்தை நீ ஏற்றுக்கொண்டு  மனிதர்களின் மனங்களை அந்த இடத்தில் அவர்களின் தாகத்தின் பக்கம்  நீ புகுத்துவாயாக மேலும் அவர்கள் அங்கு உனக்கு நன்றி செலுத்தும்  அவர்களுக்கு பற்பல கனி வரகங்களை அவர்களுக்கு நீர் வழங்குவாயாக ..

அல்லாஹு அக்பர் எவ்வளவு பெரிய துஆ மாஷா அல்லாஹ் இன்று இந்த துஆ  உண்மையாக அரங்கேறி கொண்டிருக்கிறது என்பதை நீங்களே புரிந்திருப்பீர்கள் ஏன் என்றால்  முஸ்லிம்களாக உள்ள ஒவ்வொரு மனிதரும் எப்பொழுது அல்லாஹுவின் வீட்டிற்கு போவோம் என்று காத்துக்கொண்டிருக்கிறார்கள் .. கடுகளவு ஈமான் உள்ள ஒரு அடியான்கூட இதற்கு ஆசை படுவான் மாஷா அல்லாஹ்  மேலும் மாற்று மத சகோதரர்கள் கூட இதற்கு ஆசைபடுகிறார்கள் நீங்கள் கேள்விபட்டிருப்பீர்கள்  அனைத்து வழிபட்டு தடங்களில் அனுமதி உள்ளது ஆனால் மக்காவில் மட்டும் அதனை காண ஏன் அனுமதிக்க மறுக்கிறீர்கள் என்று இது நமது நாயகத்தின்  கட்டளை . அதனை அல்லாஹ் நிறைவேற்றிகொண்டிருகிறான் என்பதே உண்மை என் என்றால் இன்றைய சவ்தி அரேபியாவின் நிலவரம் அனையவரும் அறிந்ததே எவர்கள் நம் சமூகத்திற்கு எதிரிகளோ அவர்களை அந்த  சவ்தி அரசு தங்களுக்கு பாதுகாப்பு என்று அவர்களது படையை அவர்களது நாட்டுக்குள் புகுத்தியுள்ளார்கள் அவர்களுக்கு ஹராமான அணைத்து வசதிகளும் அரசே பொருப்பெர்ற்று வழங்கிகொண்டிருக்கிறது சவ்தி நாட்டில் மது அனுமதி இல்லை ஆனால் அவர்களுக்கு அனுமதிக்கப்பட்டது விபச்சாரம் அனுமதி இல்லை ஆனால் அவர்களுக்கு அரசே அதற்கு உதவுகிறது . அல்லாஹ் பாதுகாப்பானாக .. ஆதலால் இவர்கள் ஒன்னும் நபி பெருமான் சள்ளள்ளஹு அலைஹி வசல்லம் அவர்களது கட்டளையை ஏற்று நடப்பவர்கள் என்பதாய் எண்ணி விட வேண்டாம் மாஷா அல்லாஹ் அல்லாஹ் பாதுகாத்த நல்ல மூமின்கலும் இந்த இடத்தில் வாழத்தான் செய்கிறார்கள் .. ஆதனால்தான் கூறுகிறேன் அல்லாஹுதான்  அவனின்  வீட்டையும் அவனது ரசூலான முஹம்மத் சள்ளள்ளஹு அலைஹி வசல்லம் அவர்களது உறங்கும் இடத்தையும் பாதுகாக்கிறான் .

இவ்வாறு நபி இப்ராஹிம் அலைஹி வசல்லம் அவர்கள்  பிராத்தனை செய்தார்கள் , சிறிது நேரத்தில் இஸ்மாயில் அலைஹி வசல்லம் அவர்கள் பச்சிளம் குழந்தை பசியால் அளதுடங்கிவிட்டர்கள் . அதனை கண்ட ஹாஜரா அம்மையார் அவர்களுக்கு பால் சுரக்க வில்லை அவர்களும் பசியால் வாடிக்கொண்டிருக்கிறார்கள் மேலும் எங்காவது நீர் இருந்தால் அதனை அருந்தி அதன் மூலம் பால் சுரக்கும் என்று எண்ணி நபி இஸ்மாயில் அலைஹி வசல்லம் அவர்களை காபாவிற்கு பத்தடி தூரத்தில் வைத்துவிட்டு அவர்கள் சவா என்ற மலை மீது ஏறினார்கள் ஒரு குறிப்பிட்ட சில தூரத்தில் மர்வா என்ற இன்னொரு மலை இருக்கிறது அதன் மேல் நீர் இருப்பது போல் " கானல் நீர் " தெரிகிறது ஆதலால் அவர்கள் அந்த மலைக்கு ஓடுகிறார்கள் பிறகு அந்த  மர்வா என்ற மலையில் ஏறி பார்த்தால் சவா மலையில் கானல் நீர் தெரிகிறது இப்படியே ஏழு முறை அங்கும் இங்கு ஒடுக்ரார்கள் அல்லாஹு அக்பர் அல்லாஹ் இந்த த்யாகத்தை க்யாமத் நாள் வரை வரும் மக்கள் நம் ஹாஜரா அம்மையார் பட்ட வேதனையை உணரவேண்டும் என்பதற்காக அல்லாஹ் சவா மர்வா இடையில் தொங்கோட்டம் என்ற ஒரு விதியையே ந்யேமித்திருக்கிறான் . அங்கு ஓடும்பொழுது இரு மலைகளுக்கும்  இடைப்பட்ட இடத்தில இப்பொழுது அடையாளத்திற்காக  பச்சை விளக்கு போருத்தியிருக்கார்கள் இந்த பச்சை விளக்கு எரியும் இடத்தில் மட்டும் ஆண்கள் கொஞ்சம் வேகமாக ஓடுவது சுன்னத் . ஏன் என்றால் அந்த பச்சை விளக்கு பகுதியில் இருந்து பார்த்தால் காபத்துல்லாஹ் அப்படியே தெரியும் ஹாஜரா அம்மையார் தனது மகன் இஸ்மாயிலை காபாவிற்கு அருகில் விட்டுவிட்டு ஓடிகொண்டிருண்டார்கள் அவர்கள் இந்த பச்சைவிளக்கு பகுதிக்கு வரும்பொழுது தனது பிள்ளை அழுவதை கண்டதும் வேகமாக ஓடுவார்கள் சிறிது தூரத்தில் காபா மறைந்து விடும் அதன் பிறகு மெதுவாக ஓடினார்கள் என்று நபி முஹம்மத் சள்ளள்ளஹு அளஹி வசல்லம் அவர்கள் கூறியதாக மார்க்கா அறிஞர்கள் குறிப்பிடுகிறார்கள் .

இவ்வாறு ஹாஜரா அம்மையார் ஏழு முறை இங்கும் அங்கும் ஓடி கொண்டிருந்தார்கள் அல்லாஹ் இவர்களை விட்டுவிடுவான அல்ல்ஹுவை விட கருணையாளன் யார் . அல்லாஹ் தனது குதுரத்தால்  இஸ்மாயில் அலைஹி வசல்லம் அவர்கள் தனது காலால் தரையில் அடிக்க ஒரு ஊற்று கிளம்பி வெளியே வந்தது இதனை கண்ட ஹாஜரா அம்மையார் அங்கு வந்து தண்ணீரை அருந்தி பிறகு நாளை வேண்டும் என்பதற்காக மண்ணை வைத்து அணைபோல் கட்டி  "ஜம் ஜம்"   என்று கூறினார்கள் மார்க்க  அறிஞர்கள் குறிப்பிடுகிறார்கள் ஜம் ஜம் என்றால் ஹிப்ரு மொழியில் நில் நில் என்று அர்த்தம் என்பதாக . இந்த சம்பவத்தை நமது கண்மணி நாயகம் சள்ளல்ல்ஹு அலைஹி வசல்லம் அவர்கள் கூறியதாக மார்க்க அறிஞ்சர்கள் குறிப்பிடுகிறார்கள் " இஸ்மாயிளுடைய தாயிற்கு அல்லாஹ் ரஹ்மத் செய்யட்டும் அன்றையதினம் மட்டும் ஹாஜரா அம்மையார் ஜம் ஜம் என்று கூற வில்லை என்றால் இன்றைய தினம் உலகம் முழுவதும் இந்த நீர் வற்றாத ஜீவநதியாக ஓடிக்கொண்டிருக்கும்  என்று . மாஷா அல்லாஹ் உங்களை நீங்களே கேட்டுகொல்லுங்கள் இன்று ஜம் ஜம் நீர் குடிக்காத ஒரு முஸ்லீமாவது இருக்க முடியுமா ஒரு சிறிய ஊற்றின் மூலம் உலகத்திற்கே அல்லாஹ் தந்து அத்தாட்ச்சியான ஜம் ஜம் நீரை கொடுத்துக்கொண்டிருக்கிறான் .
 மாஷா அல்லாஹ் இவ்வாறு தனது தாகத்தையும் தனது பிள்ளையின் பசியையும் அடைத்துவிட்டு மேலும் காபத்துல்லாவின் அறிகிலே ஒரு சிறு கூடாரம் கட்டி அங்கு தங்கி இருக்கிறார்கள் தாயும் பிள்ளையும் மேலும் அவர்கள் இருக்கும் இடத்திற்கு அருகில் பறவைகள் சுற்றுவதை கண்டு ஜுருஹூம் என்ற வியாபாரக் கூட்டம் ஹாஜரா அம்மையாரிடம் இங்கு தங்கிக்கொள்ளலாம என்று கேட்டார்கள் அதற்க்கு தாராளமாக தங்கிகொல்லுங்கள் என்று சொன்னவுடன் சிறுக சிறுக மக்கள் வர வர அந்த பாலைவனமாக இருந்த  பகுதி ஒரு சிறிய ஊரை போல் மாறுகிறது .
பிறகு சிறிது காலம் அங்கு தங்கி இருந்தார்கள் பிறகு சில காலம் கழித்து இப்ராஹிம் அலைஹி வசல்லம் அவர்கள் தனது குடும்பத்தை காண மக்காவிற்கு வந்தார்கள் அப்பொழுது இஸ்மாயில் அலைஹி  வசல்லம் அவர்கள் வாலிபத்தை அடைந்த நிலையில் தன் தந்தையின் பணியில் ஒத்துழைக்கும் அளவிற்கு அறிவுடையவராக இருதார்கள் மேலும் அன்றைய இரவு அங்கேயே தங்கி இருந்தார்கள் இபுறாகீம் அலைஹி வசல்லம் அவர்கள் . மேலும் அவர் காலையில் தனது மகன் இஸ்மாயில் அலைஹி வசல்லம் அவர்களை அழைத்து மகனே நான் உன்னை அறுத்து பலியிடுவதை போன்று கனவு கண்டேன் உன்னுடைய அபிப்ராயம் என்ன என்று தனது மகனிடம் கேட்டார் . நாமாக இறந்தால் என்ன செய்திருப்போம் என்பதை உங்கள் கேள்விக்கே விட்டுவிடுகிறேன் அனால் நமது தந்தை இஸ்மாயில் அலைஹி வசல்லம் அவர்கள் கூறிய வார்த்தை  என் அருமை தந்தையே நீங்கள் உங்களுக்கு ஏவப்பட்டதை நிறைவேற்றுங்கள் அல்லஹ்வின் அருளால் நிச்சயமாக நீங்கள் என்னை பொருமையாலராகவே காண்பீர்கள் என்று கூறினார்

மேலும் நபி இப்ராஹீம் அலைஹி வசல்லம் அவர்கள் தன் மகனை குப்புற படுக்கவைத்து கத்தியை வைத்து அறுக்க முற்பட்டார் அப்பொழுது அல்லாஹ் கூறுகின்றான் தனது திருமறையில் அப்பொழுது இப்ராகிமை நாம் அழைத்தோம் இப்ராஹீமே நிச்சயமாக நீர் உம் கனவை உண்மையாக்கி விட்டீர் நிச்சயமாக நன்மை செய்வோருக்கு இவ்வாரே நாம் கூலி தருகிறோம் மேலும் அல்லாஹ் கூறினான் நிச்சயமாக இதுவே தெளிவான  பெரும் சோதனையாகும் என்று கூறினான் மேலும் இதற்க்கு பகரமாக நபி இப்ராஹீமுக்கு அல்லாஹ் ஒரு ஆட்டை கொடுத்து இதனை அல்லாஹ்விர்காகா குர்பானி செய்வீராக என்று கூறினான் மாஷா அல்லாஹ் இவ்வளவு த்யாகங்கள் அல்லாஹ் அதனால் தான் நபி இபுறாஹீம் அலைஹி வசல்லம் அவர்களை ஹலீளுல்லாஹ் அல்ல்ஹுவின் நேசராக ஏற்றுகொண்டான்

மேலும் சிறிது காலம் கழித்து அல்லாஹ் மேலும் ஒரு கட்டளை பிறப்பித்தான் நபி இப்ராஹீமே காபத்துல்லாஹ்வை உயர்த்தி கட்டுவாயாக என்று மேலும் நபி இப்ராஹீம் அலைஹி வசல்லம் அவர்கள் இஸ்மாயில் அலைஹி  வசல்லம் அவர்களிடம் என் அருமை மகனே நான் அல்லாஹுவின் பள்ளியை கட்ட்விருக்கிறேன் எனக்கு உதவி செய்வாய என்று கேட்டார் அதற்கு நபி இஸ்மாயில் அலைஹி வசல்லம் அவர்கள் நிச்சயமாக  தந்தையே நானும் உங்களுக்கு உதவுகிறேன் மேலும் இருவரும் சேர்ந்து காபதுல்லாஹுவை  கட்ட தொடங்கினார்கள் சிறிது  உயரம் ஆக நபி இப்ராகீம் அலைஹி வசல்லம் அவர்கள் ஒரு கல்லின் மீது ஏறி நின்று காபதுல்லாவை உயர்த்தினார்கள்  அந்த கல் கபதுல்லாஹ் உயர உயர அவருக்கு அந்த கல்லும் உயர்துகொண்டே போனதாக அல்லாஹ் இவ்வாறு நபி இப்ராஹீமுக்கு உதவி செய்ததாக உலமாக்கள் குறிப்பிடுகிறார்கள் இந்த கல்தான் மக்காமு இபுறாஹீம் என்று காபதுல்லாஹுவில் ஒரு கூண்டிற்குள் வைக்கப்பட்டிருக்கிறது   மேலும் சிறிது நேரம் கழித்து நபி இஸ்மாயில் அலைஹி  வசல்லம் அவர்கள் தந்தையே எனக்கு மிகவும் சோர்வாக இருக்கு சிறிது நேரம் கழித்து நான் கல் எடுத்து தருகிறேன் என்று கூறி உக்கந்துவிட்டர்கள்
மேலும் நபி இப்ராஹீம் அலைஹி வசல்லம் அவர்கள் அதனை கண்டுகொள்ளாமல் கல்லுதா மகனே என்று கேட்க ஜிப்ரஹீல் அலைஹி வசல்லம் அவர்கள் ஹஜ்ரத் அஸ்வத் கல்லை கொடுத்தார்கள் சிறிது நேரம் கழித்து இஸ்மாயில் அலைஹி வசல்லம் அவர்கள் கேட்டார்கள் தந்தையே இந்த கல்லை எடுத்து தந்தது யார் என்று வினவியபொழுது சோர்வடையாத ஒருவர் தந்தார் என்று நபி இப்ராஹீம் அலைஹி வசல்லம் கூறுகிறார்
மேலும் இந்த ஹஜ்ரத் அஸ்வத் கல்லை  பற்றி பெருமானார் முஹம்மத் சல்லல்லாஹு அலைஹி வசல்லம் அவர்கள் கூறினார்கள் இந்த ஹஜ்ரத் அஸ்வத் கல் சொர்கத்தில் இருந்து வந்த கல் இது நபி இபுராஹிம் அலைஹி வசல்லம் காலத்தில் வெள்ளையாக பலுங்கி கர்க்களைபோன்று இருந்தது என்று கூறியதாக உலமாக்கள் கூறுகிறார்கள் மேலும் இந்த கல்லை முத்தமிடுவது சுன்னத் ஆனால் ஹஜ்ரத் அஸ்வத் கல்லுக்கு ஏதாவது சக்தி உண்ட என்றால் இதற்கு மேலும் ஒரு ஹதீதே சான்றாக இருக்கும் உமர் ரலி அல்லாஹு தாள அவர்கள் அந்த ஹஜ்ரத் அஸ்வத் கல்லை  முத்தமிடும் முன் பிஸ்மில்லாஹி அல்லாஹு அக்பர் என்று கூறி ஹஜ்ரத் அஸ்வதே நீ ஒரு கல்லை தவிர வேறு ஒன்றும் இல்லை உன்னை நான் முத்தமிட காரணம் எனது ரசூல் முஹம்மத் சல்லல்லாஹு அலைஹி வசல்லம் அவர்கள் உன்னை முத்தமிட்டதால் மட்டுமே அல்ல்ஹுவின் ரசூல் உன்னை முத்தமிடாமல் காலால் வைத்து மிதிதிருந்தால் நாங்களும் உன்னை காலால் தான் மிதிதிருப்போம் . என்று கூறினார்கள் அல்லாஹு அக்பர் .
      மேலும் இப்ராஹீம் அலைஹி வசல்லம் அந்த பள்ளியை இப்பொழுது இருக்கு காபாவைபோல்  வடிவமைக்க வில்லை அவர் வடிவமித்த தோற்றம் அங்கு நீங்கள் போயிருந்தால் பார்த்திருக்கலாம் ஒரு பக்கம் மட்டும் வட்டவடிவில் அடைத்து வைத்திருப்பார்கள் மூன்று பக்கம் கட்ட வடிவில் ஒருபக்கம்  மட்டும் வட்டவடிவில்தான் நபி இபுறாஹீம் அலைஹி வசல்லம் அவர்கள் வடிவமைத்தார்கள் . இந்த சம்பவத்தை தொடர்ந்து ஒரு ஹதீதை உலமாக்கள் குறிப்பிடுகிறார்கள் நபி சள்ளள்ளஹு அலைஹி வசல்லம் அவர்கள் அன்னை ஆயிசா ரலியல்லாஹு அன்ஹும் அவர்களிடம் இந்த மக்கள் மட்டும் இஸ்லாத்திற்கு  புதியவர்களாக இல்லாமல் இருந்தால் நான் நபி இபுறாஹீம் அலைஹி வசல்லம் அவர்கள் கட்டியவாறே   கட்டியிருப்பேன்  என்று கூறினார்கள் மேலும் இதனை அப்துல்லாஹ்  இப்னு ஜுபைர் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் மக்காவை ஆட்சி செய்யும்பொழுது இதனை ஆயிஷா ரல்யள்ளஹு தெரிவித்ததாக அதன்படி வடிவமைத்ததாகவும் மேலும் அதன் பின் ஆட்சிக்கு வந்த ஹஜ்ஜாஜ் இப்னு யூசுப் என்ற ஆட்சியாளன் அப்துல்லாஹ் இப்னு ஜுபைர் ரலியல்லாஹுதால அவர்கள் மீது உள்ள வெறுப்பால் அதனை பழையபடியே கட்டமான வடிவில் மீண்டும் இடித்து கட்டினார் என்று உலமாக்கள் கூறுகிறார்கள் அன்றிலிருந்து இன்றுவரை அப்படியே உள்ளது

மேலும்  இவ்வாறு அவர்களது இந்த பணியை முடித்துவிட்டார்கள்  முடித்தவுடன் அல்லாஹ் கூருக்றான் நீங்கள் மக்களை ஹஜ் செய்வதற்காக அழையுங்கள் என்று உத்தரவிட்டான் அதன் படி நபி இபுறாஹீம் அலைஹி வசல்லம் அவர்கள் ஹஜ்ஜுக்கு வாருங்கள் ஹஜ்ஜுக்கு வாருங்கள் என்று நாலா பக்கமும் அழைத்தார்கள்  இதன் தொடர்ச்சியில் உலமாக்கள் கூறுகிறார்கள் அல்ல்ஹுவின் ரசூல் முஹம்மத் சள்ளள்ளஹு அலைஹி வசல்லம் அவர்கள் கூறிய இந்த வார்த்தைக்கு எத்தனை  பேர் பித்தலங்களாக இருக்கும் நிலையில் லப்பைக் என்று கூறினார்களோ அத்தனை  முறை அவர்கள் ஹஜ்ஜ் செய்வார்கள் என்பதாக ...

மேலும் இந்த பணியை முடித்தவுடன் நபி இப்ராஹீம் அலைஹி வசல்லம் அவர்களும் இஸ்மாயில் அலைஹி வசல்லம் அவர்களும் அல்ல்ஹுவிடம் எங்கள் ரட்சகனே எங்களது இந்த பணியை நீ முழுமையா ஏற்றுகொல்வாயாக மேலும் நீயே அனைத்தையும் செவி ஏற்ப்பவன் நன்கரிதவன் என்றும்
மேலும் எங்கள் ரட்சகனே எங்களில் இருந்து எங்கள் சந்ததிகளில் ஒரு கூட்டத்தினரை உனக்கு கீல்படிபவர்களாக ஆக்கி வைப்பாயாக மேலும் எங்களுடைய தவ்பாவை  ஏற்றுக்கொள்வாயாக  மேலும் நிச்சயமாக நீயே தவ்பாவை ஏற்பவன் மிக்க கருணையுடையவன்

மேலும் எங்கள் ரட்சகனே எங்கள்  சந்ததிகளில் இருந்து ஒரு தூதரை அனுப்புவாயாக அவர்கள் மக்களுக்கு உன்னுடைய வசனங்களை ஓதி காண்பித்து வேதத்தையும் அறிவையும் (குரானின் விளக்கமான சுன்னத்தையும் ) மேலும் அவர்களை பரிசுத்தமும் படுத்துவார் நிச்சயமாக நீயே தீர்க்கமான அறிவுடையவன் என்று பிராத்தித்தார் இந்த பிராத்தனை யாருக்காக நமது முஹம்மத் சல்லாஹு அலைஹி வசல்லம் அவர்களுக்காக பிராத்தனை செய்தார்கள் அவர்கள்தான் மக்களுக்கு குரானை ஒதிகன்பிதார் மேலும் தனது வாழ்வையே குரானுக்கு விளக்கமாக வாழ்ந்து காண்பித்தார் மேலும் அவர்களது தோழர்களான சஹாபாக்களை வேதத்தையும் அறிவையும் கற்று காட்டுமிராண்டிகளாக இருந்தவர்களை உலக மக்களுக்கே முன் உதாரணமாக மாற்றினார்கள் மாஷா அல்லாஹ் ...
மேலும் அல்லா கூறுகிறான் தன்னை தானே மடையனாக்கியவனை தவிர   இப்ராஹிமுடைய மார்கத்தை புறக்கணிப்பவன் யார்? நிச்சயமாக நாம் இவரை இவ்வுலகில் தேர்வு செய்தோம் மறுமையில் இவர் நல்லோருடன் உள்ளவராவார்
மேலும் அல்லாஹ் நபி இப்ராஹிமிடம் நீர் எனக்கு கீழ்படியும் என்று கூறியபொழுது அவர் அகிலத்தாரின் இரட்சகனுக்கு நான் கீல்படிந்த்துவிட்டேன் . என கூறினார்

மேலும் நபி இப்ராஹீமும் அவரது மகன் இஸ்மாயில் அலைஹி வாசலாம் மற்றும் அவர்களது குடும்பம் செய்த த்யாகத்தை நினைத்துதான் நாம் த்யாகத்திருநாள் என்று ஒரு பெருநாள் கொண்டாடிகொண்டிருக்கிரோம் மேலும் அந்நாளில் உலகமக்கள் ஹஜ்ஜுக்காக படையெடுக்கும் கட்சி அல்ஹம்துலில்லாஹ்  கண்ணுக்கு விருந்தாய் காட்சியளிக்கும் மேலும் அல்ல்ஹுவின் வீட்டிற்க்கு போக ஒவ்வொரு முஸ்லீமின் மனமும் ஏங்கி கொண்டே  இருக்கும்.

நபி இஸ்மாயில் அலைஹி வசல்லம் அவர்களது  சந்ததிகளில்  வந்த ஒரே நபி நபி முகம்மது சள்ளள்ளஹு அலைஹி வசல்லம்  அவர்கள் மட்டுமே இதனால்தான் யூதர்களும் கிறிஸ்துவர்களும் இப்ராஹிம் அலைஹி வசல்லம் அவர்களுக்கு இஸ்மாயில் என்ற மகன் இருந்ததையே   மறைக்கிறார்கள் மேலும் சிலபேர் இஸ்மாயில் என்ற மகன் இருதார் ஆனால் அறுத்து பலியிட துணிந்தது இஸ்மாயிலை(அலைஹி வசல்லம்) இல்லை இஷ்ஹாக்  அலைஹி வசல்லம் அவர்களை இன்ஷா அல்லா அடுத்த பதிவில் இஷ்ஹாக் அலைஹி வசல்லம் அவர்களின்  வரலாறில் உங்களுக்கு புரியவரும் இந்த சம்பவத்தை பற்றி நபி முஹம்மத் சல்லல்லாஹு  அலைஹி வசல்லம் அவர்கள் கூறுகிறார்கள் நான் அறுத்து பலியிடதுணிந்த இரு தந்தையின் மகனாக இருக்கிறேன் என்று . ஒருவர் இஸ்மாயில் அலைஹி வசல்லம் அவர்கள் மற்றும் ஒருவர் நாயகம் சல்லல்லாஹு அலைஹி வசல்லம் அவர்களின் தந்தை அப்துல்லாஹ்  என்று குறிப்பிடுவார்கள் ..

மாஷா அல்லா இன்றைய தினம் நபி இஸ்மாயில் அலைஹி வசல்லம் அவர்களின்  சுருக்கமான வரலாறை நாம் கண்டோம் இன்ஷா அல்லாஹ் அடுத்த  பதிவில் நபி  இஷ்ஹாக் அலைஹி  வசல்லம் அவர்களை பற்றி இன்ஷா அல்லா காண்போம்
இதில் எனக்கு அறியாத பல சம்பவங்கள் உள்ளது என்பதே உண்மை ஆதலால் நாம் நம் வரலாறுகளை தேட முற்படுவோம் . இல்லையென்றால் நம் சுய அடையாளத்தை தொலைத்து வெறும் ஜடமாக வாழும் நிலைமை ஏற்பட்டாலும் அச்சரியம் இல்லை ஏன் என்றால் இன்றைய இந்திய முஸ்லீம்களின் நிலை அதுதான்


யா அல்லாஹ் நாங்கள் எதனை அறிய முற்பட்டோமோ அதனை எங்களுக்கு மேலும் மேலும் தெளிவு படுத்துவாயாக ஆமீன்
யா அல்லாஹ் எங்களுக்கு வலுவான ஈமானை வழங்குவாயாக  ஆமீன்
யா அல்லாஹ் எங்களுக்கு இந்திய முஸ்லீம்களுக்கும் பாலஸ்தீனில் உன்னுடைய எதிரிகளான யூத நாசராநிகளிடம்  போர் புரியும் என் தாய்ம்மார்கள் தந்தைமார்கள் என் சகோதரிகள் என் சகோதரர்கள் மேலும் என் சொந்தம்மான பிஞ்சிலேயே உனக்காக சஹீத் என்னும் உயர் அந்தஸ்திற்காக  போராடிக்கொண்டிருக்கும் குழந்தைகள் மேலும் காஸ்மீரில் இராக்கில் சிரியா வில் பர்மாவில் அஸ்ஸாமில் குஜராத்தில்  போன்ற உலகம் முளுவதும் உன் தீனுக்காக போராடிக்கொண்டிருக்கும் அனைத்து சகோதரர்களுக்கும் வெற்றியை வழங்குவாயாக . ஆமீன் அவர்களையும் அவர்களின் உடமைகளையும் பாதுகாப்பாயாக ஆமீன்
எங்களை யூத நாசராநிகளின் மற்றும் சைத்தானின் சூழ்ச்சிகளில் எங்களை பாதுகாப்பாயாக ஆமீன்
மரணிக்கும் பொழுது முஸ்லீமாக மரணிக்கும் பாக்கியத்தை தந்தருள் வாயாக  ஆமீன் ஆமீன் யா ரப்பல் ஆலமீன்

இன்ஷா அல்லாஹ் எதை  தெரிந்துகொண்டோமோ அதன் படி  அமல் செய்யும் தௌபிக்கை அல்லாஹ் தண்டருல்வானாக ஆமீன்
யா அல்லாஹ் குரானுடன் எங்கள் அனைவரையும் தொடர்பு படுத்துவாயாக ஆமீன் யா ரப்பல் ஆலமீன்

நண்பர்களே படித்து உங்களது நண்பர்குக்கு இந்த பதிவுகளை பற்றி எத்தி வையுங்கள் அவர்களை இந்த பக்கத்தில் இனைய வேண்டுகோள் விடுங்கள் அல்லாஹ்  ரக்மதுசெய்வானாக ஆமீன் ஆமீன் யா ரப்பல் ஆலமீன்

வாஹிர்தவான அல்ஹம்துலில்லாஹி  ரப்பில்  ஆலமீன்

அஸ்ஸலாமு அழைக்கும் வ ரஹ்மத்துல்லாஹி வ பரக்காத்துஹு 


நபி இபுறாஹீம் அலைஹி வசல்லம் அவர்களது வரலாறு



பிஸ்மில்லாகிர் ரஹ்மானிர் ரஹீம்

" அளவற்ற அருளாளன் நிகரற்ற அன்புடையோன் அல்லாஹுவின் திரு பெயரால் ஆரம்பம் செய்கிறேன் "

அஸ்ஸலாமு அழைக்கும் வ ரஹ்மத்துல்லாஹி வ பரக்காத்துஹூ

ரப்பி சித்னி இல்மன்

யா அல்லாஹ் எங்களது அறிவாற்றலை அதிகப்படுத்துவாயாக ..


நபர்களே இன்றையதினம் இன்ஷா அல்லாஹ் நபி இப்ராஹிம் அலைஹி வசல்லம் அவர்களை பற்றி பாப்போம், இவர்களை பற்றி நாம் படிக்கவேண்டும் என்றால் அல்லாஹுஅக்பர் ஹல்ரத்  நபி இபுராஹிம்  அலைஹி வசல்லம் இவர்களை பற்றி அறியாத மக்களே இல்லை என்ற அளவிற்கு அல்லா இவருடைய வாழ்வை அவன் அருளிய அனைத்து வேதங்களிலும் குரிபிட்டிருக்கிறான்

மேலும் ஹல்ரத்  நபி இபுராஹிம்  அலைஹி வசல்லம் அவர்களை யூதர்களும் கிறிஸ்துவர்களும் அவர்களுக்கு சொந்தமானவர்கள் என்று வாதிடுகிறார்கள் மேலும் யூதர்கள்   நபி இபுராஹிம்  அலைஹி வசல்லம் அவர்கள் யூதராகதான் வாழ்ந்தார்கள் என்றும் கிறிஸ்துவர்கள் அவர் ஒரு கிறிஸ்துவராக வாழ்ந்தார்கள் என்று குறிப்பிடுகிறார்கள் ஆனால் நம்மை படைத்த அல்லா கூறுகிறான்   நபி இபுராஹிம்  அலைஹி வசல்லம் அவர்கள் ஒரு உண்மையான முஸ்லீமாக வாழ்ந்தார்கள் என்று மேலும் அல்லாஹ்   நபி இபுராஹிம்  அலைஹி வசல்லம் அவர்களை கலீலுல்லாஹ் (அல்ல்ஹுவின் உற்ற நண்பன் ) என்ற பெயரை பெற்றவர் மேலும் இவருக்கு அபு லுஇப்பான் (luhifaan)  விருந்தாளிகளின் தந்தை என்ற புனை பெயரும் உண்டு .

மார்க்க அறிஞர்கள் குறிப்பிடுகிறார்கள் நபி இபுராஹிம்  அலைஹி வசல்லம் பாபிலோன் என்ற இடத்தில் பிறந்தார்கள்  இவருடைய தந்தை பெயர் ஆசர் .இவருக்கு மூன்று ஆண்குழந்தைகள் பிறக்கிறார்கள் அவர்களில் மூத்தவர் நாகூர் இரண்டாவதாக நபி இபுராஹிம் அலைஹி வசல்லம்  மூன்றாவதாக ஹாறான் என்றவர்களும் மேலும் இந்த ஹாறான் என்ற அந்த சஹோதரருக்கு லூத் அலைஹி வசல்லம் என்ற ஆன் மகனும் சாரா என்ற பெண் மகளும் பிறக்கிறார்கள் இவர்கள் சிறு வயதிலேயே இவர்களது தந்தை ஹாறான் மறைந்து விடுகிறார்கள் மேலும் நபி இபுராஹிம் அலைஹி வசல்லம் அவர்களது தம்பியுடைய மகளை திருமணம் செய்துகொண்டார்கள் என்று மார்க்க அறிஞர்கள் குறிப்பிடுகிறார்கள் அனைத்தையும் அல்லாஹுவே அறிந்தவன்

மேலும் அல்லாஹ் இவர்களது வரலாற்றில் நமக்கு அல்ஹம்துலில்லாஹ் எண்ணற்ற படிப்பினையை வைத்திருக்கிறான் மேலும் அல்லாஹ் கூறுகிறான் நபி இபுராஹிம் அலைஹி வசல்லம் அவர்களை இந்த மனித சமூகத்திற்கு இமாமாக ஆக்கி இருக்கிறோம் என்று மேலும் நாம் அறிந்தது நமது கண்மணி நாயகம் முஹம்மது சள்ளலாஹு அலைஹி வசல்லம் அவர்கள் உலகத்தில் அனுப்பப்பட்ட அணைத்து நபிகார்களுக்கும் இமாமாக அருளபட்டவர் என்று மேலும் நபி முஹம்மத் சள்ளலாஹு அலைஹி வசல்லம் அவர்கள் கூறியதாக மார்க்க அறிஞ்சர்கள் குறிப்பிடுகிறார்கள் எனக்கு இமாமாக ஆசானாக நபி இபுராஹிம் அலைஹி  வசல்லம் அவர்கள்தான் என்று . இந்த நபி இபுராஹிம் அலைஹி வசல்லம்  அவர்களை பற்றி அனைவருமே அல்ஹம்துலில்லாஹ் ஒரு சிறுதுளி அளவிற்காவது அறிந்திருக்கிறோம்  , அறியாதவர்கள் அவர்களே கேட்டுகொல்லட்டும் அவர்கள் யார் என்று . இவர்கள் வழிமுறையை நாம் இவரை அறியாமலேயே பின்பற்றுகிறோம் என்பதே உண்மை என் என்றால் மீசையை கத்தரித்து தாடியை வளைப்பது , நேகங்களை வெட்டுவது மேலும் கத்னா செய்வது குர்பானி என்ற தியாக உணர்வை அல்லாஹுவிர்காக படைப்பது , விருந்தினருக்கு உணவளிப்பது , போன்ற எண்ணற்ற நற்குணங்கள் இவரிடம் இருந்து நமக்கு படிப்பினையாக அருளி இருக்கிறான்

இவர் பாபிலோனில் தனது குடும்பத்தோடு வசித்து வந்தார் மேலும் இவரது தந்தை ஆசர் ஒரு சிலை வணங்கியாக வாழ்ந்து வந்தார் மேலும் இவரது தந்தையை பற்றி மார்க்க அறிஞர்கள் கூரிபிடுகிரார்கள் இவர் சிலைவனக்கதின் பூசாரியாக இருந்தார் என்று . மேலும் இவர் தனது குடும்பத்தோடு கண்ஹான் என்ற ஊருக்கு இடம்பெயந்து சென்றார்கள் இன்றளவில் கண்ஹான் என்ற இடம் வேச்ட்பான்க் (westbank) என்றழைக்க  படுகிறது . மேலும் இவர் அங்கு வாழ்ந்து கொண்டிருந்தார்கள் அப்பொழுது தனது ரட்சகன் யார் என்பதை விளங்க ஆசை கொண்டவர்களாக ஒரு நாள் நபி இபுராஹிம் அலைஹி  வசல்லம் ஆவர்கள் இரவில் ஒரு ஒளிருட்டும் நட்சத்திரத்தை கண்டார்கள் அப்பொழுது இந்த நட்சத்திரம்தான் எனது ரத்சாகனாக இருக்க கூடும் என்று நினைத்தார் சிறிது நேரத்தில் அது மறைந்தது . மறைந்தது எப்படி எனக்கு ரப்பாக இருக்க இயலும் என்று என்னிகொண்டார்  மேலும் ஒளிருட்டும் குளுமையான சந்திரனை கண்டார் நிச்சயமாக இதுதான் எனது ரப்பாக இருக்கும் என்று கூறினார்  அதுவும் காலையில் மறைந்ததும்  , மறைந்தது எப்படி ரட்சகனாக இருக்க கூடும் என்று கூறினார் மேலும் சிறுது நேரத்தில் மிக பிரகாசமாக ஒளியை வெளிபடுத்திகொண்டு வெளி வந்த சூரியனை கண்டு நிச்சயமாக இதுதான் என் ரப்பாக இருக்க கூடும் இதுதான் பெரிய ரப்பு என்று கூறினார் மாலையானதும் சூரியனும் மறைந்துவிட்டது . அப்பொழுது உணர்த்து கூறினார் இதுவும் எனது ரப்பு  அல்ல வானங்கள்  மற்றும் பூமியை படைத்த ஏக இறைவனை பக்கமே எனது முகத்தை நான் திருப்புகிறேன் நான் இனைவைபவனாக இல்லை என்று கூறினார் .

மேலும் அல்லாஹ் நபி இபுராஹிம் அலைஹி  வசல்லம் அவர்களுக்கு நபித்துவத்தை அருளியபிறகு தனது பணியை முதலில் தனது தந்தையிடம் இருந்தே தொடங்கினார் .

தனது தந்தையிடம் எனது தந்தையே நீங்கள் எதனை வணகுகிரீர்கள் என்று வினவினார் அதற்கு அவர் எனது மூதாதையர்கள் எதனை வணங்கினார்களோ அதனை நானும் வணகுகிறேன் . அதற்கு நபி இபுராஹிம் அலைஹி  வசல்லம் அவர்கள் எதையும் கேட்க சக்தியற்ற   அந்த சிலைகலையா வணங்குகிறீர்கள் எதையும் பார்க்க சக்தியில்லாத உங்களுக்கு வரும் தீங்கை தடுக்க சக்தியில்லாத அதனை வந்குரீர்களா நீங்கள் ஏக இறைவன் ஒருவனான அல்லாஹுவின் பக்கமே உங்கள் முகங்களை திருப்புங்கள் என்று கூறினார் . அதற்க்கு நபி இபுராஹிம் அலைஹி  வசல்லம் அவர்களின் தந்தை என்ன இப்ராஹீமே எனது கடவுளை பலிக்கிரீரா என்று கேட்டார் நீ இந்த செயலைவிட்டு நீங்கவில்லை என்றால் நிச்சயமாக நான் உன்னால் கல்லால் அடித்து கொன்று விடுவேன் என்று தந்தை மகனை பார்த்து கூறினார் அதற்கு நமது பொறுமைக்கு சிகரமான நபி இபுராஹிம் அலைஹி  வசல்லம் அவர்கள் அல்லாஹ் உங்களுக்கு சாந்தியை (அமைதியை ) உண்டாக்குவானாக நிச்சயமாக நீங்கள் எதனை வணங்குரீர்களோ  அதில் இருந்து நான் விலகி கொள்கிறேன் நிச்சயமாக இணைவைக்க கூடியவனாக நான் இல்லை என்று தனது தந்தையுடன் கூறினார்  மேலும் அவர் கூறினார் எனது தந்தையே உங்களுக்காக நான் எனது இரட்சகனிடம் நிச்சயமாக பாவமன்னிப்பு தேடுவேன் என்று கூறினார் .
 பிறகு அங்கு உள்ள மக்களுக்கு பிரச்சாரம் செய்ய தொடங்கினார் பலவாரியாக பிரச்சாரம் செய்தார்கள் ஆனால் அங்கு உள்ள மக்கள் வித்தியாசமாக  நட்சத்திரங்களை தனது ரட்சகனாக ஏற்றிருந்தார்கள் அவர்களிடம் தீனை  எத்திவைதார்கள் ஆனால் அவர்கள் அதனை ஏற்கவில்லை . பிறகு  சிறுது காலம் அங்கிருந்து  தனது சொந்த ஊரான பாபிலோனுக்கு வந்தார் அங்கு உள்ள மக்கள் அனைவரும் சிலைகளை வைத்து வணங்கிக்கொண்டிருந்தார்கள் அதனை கண்ட நபி இபுராஹிம் அலைஹி  வசல்லம் அவர்கள் மிகவும் கோபமுற்றார்
நபி இபுறாஹீம் அலைஹி வசல்லம் அவர்கள் தன் சமூகத்தாரை  நோக்கி
நீங்கள் எதனை வணன்குரீர்கள் என்று கேட்டார் அதற்கு அவர்கள்
நாங்கள் சிலைகளை வணங்குகிறோம் என்று கூறினார்கள் மேலும்
நபி இபுறாஹீம் அலைஹி வசல்லம் அவர்கள் மக்களிடம் நீங்கள் அழைக்கின்ற சமையத்தில் அந்த சிலைகள் உங்களுக்கு செவியெர்கின்ரதா அல்லது நீங்கள் அதனை வணங்கினால் உங்களுக்கு ஏதேனும் பலன்தருகிறதா இல்லை நீகள் வணங்காவிட்டால் உங்களுக்கு அது ஏதேனும் இடையூறு செய்கிறதா என்று கேட்டார் அதற்கு அம்மக்கள் இல்லை இல்லை எங்கள் மூதாதையர்கள் இவ்வாரே நாங்கள் வணங்க கண்டோம் அவ்வாரே நாங்களும் வணங்குகிறோம் என்று கூறினார்கள் .

அதற்க்கு நபி இபுறாஹீம் அலைஹி வசல்லம் அவர்கள் நிச்சயமாக நீங்களும் உங்களது மூதாதையர்களும் எதனை வணங்கி வந்தீர்களோ அவைகள் நிச்சயமாக எனக்கு எதிரிகள் அகிலத்தாரின் ரட்சகன் அல்லாஹுவை தவிர அவன் எத்தகையவன் என்றால் அவனே எனக்கு உணவளிக்கிறான் அவனே எனக்கு குடிக்க நீரையும் தருகிறான் மேலும் நான் நோயுற்றால் அவனே என்னை குணப்படுத்துகிறான் மேலும் அவன் எத்தகையவனென்றால் அவனே என்னை இறக்க செய்வான் பின்னர் மறுமையில் உயிர்பெற செய்வான் என்று கூறினார்கள்
ஆகவே எனது சமூகமே ஏக இறைவனான அல்லாஹ் ஒருவனையே நீங்கள் வணங்குங்கள் .என்று கூறினார் அதற்கு அம்மக்கள் எங்களது மூதாதையர்கள் எந்த வழியில் சென்றார்களோ அதன் வழியிலே நாங்களும் செல்கிறோம் என்று கூறினார்கள் அதற்கு அம்மக்களிடம் நபி இபுராஹிம் அலைஹி  வசல்லம் அவர்கள் நிச்சயம்மாக அல்லாஹ் என்னை நேர்வழியில் செலுத்திவிட்டான் நீங்கள் உங்களை படைத்தவனை எதை கொண்டு இனைவைகின்றீர்களோ நிச்சியமாக அதனை நான் பயப்படமாட்டேன் நிச்சயமாக என் ரட்சகன் ஒவ்வொரு பொருளிலும் கூர்ந்து கவனிப்பவன் இதனை நீங்கள் அறிய வேண்டாமா என்று கூறினார்
மேலும் நிச்சயமாக உங்களுக்கு யாதொரு அத்தாட்சிகளையும் இறக்கி வைக்காமளிருக்க அந்த சிலைகளை நீங்கள் அல்லாஹுவிர்க்கு இனைவைதிருப்பதைப்பற்றி சிறிது நீங்கள் அஞ்சாமல் இருக்க நீங்கள் இனைவைதிருப்பதை நான் எவ்வாறு பயப்படுவேன் நாம் இருபிரிவினர்களும்  அச்ச பட தகுதியானவன் யார் என்பதை நீங்கள் அறிந்தவராக இருந்தால் கூறுங்கள் என்று கூறினார்.
மேலும் அல்லாஹுவை அன்றி நீங்கள் வணங்கும் அனைத்தும் நீங்கள் உங்கள் கைகளால் வடிவமைத்த  சிலைகளே அன்றி வேர் இல்லை அல்லாஹுவை அன்றி நீங்கள் வணங்குவது உங்களுக்கு உணவளிக்க சக்தி பெறமாட்டாது ஆகவே அவனிடமே உனவைதேடுங்கள் அவனையே வாங்குங்கள் அவன் பக்கமே நீங்கள் மீளுங்கள் என்று கூறினார்
மேலும் நீங்கள் என்னை பொய்யாக்கினாள் அதனை பற்றி எனக்கு கவலை இல்லை ஏன் என்றால் எனக்கு முன்னால் வந்த அணைத்து நபிமார்களையும் அவர்களது சமூகத்தார்கள் பொய்யாக்கினார்கள் எல்லா நபி மார்களுக்கு அல்லாஹ் விட்ட கட்டளை அவனின் தூதை பகிரங்கமாக எத்திவைபதே தவிர வேறில்லை

மேலும் அவர்கூறினார் நிச்சயமாக நீங்கள் இந்த சிலைகளை விட்டு செல்லும்பொழுது உங்கள் சிலைகளுக்கு திண்ணமாக நான் சதி செய்வேன் என்று கூறினார்
அதன் படி நபி இப்ராஹிம் அலைஹி வசல்லம் அதற்காக சமயம் பார்த்துகொண்டிருந்த நிலையில் ஒரு நாள் தனது தந்தை அவரிடம் இப்ராஹீமே எங்களுடன் வா அனைவரும் திருவிழா விற்கு போய்வரலாம் என்று கேட்டார் அதற்கு நமது நபி இப்ராஹிம் அலைஹி வசல்லம் அவர்கள் தனது வாழ்நாளின் முதல் பொய்யாக எனக்கு உடம்பு சரியில்லை தந்தையே என்று சொல்லி அவரை அனுப்பிவிட்டார் . நம் பார்வையில் இதுவெல்லாம் பொய்யா இது பொய்யென்று எண்ணினால் நாம் ஒவ்வொருநாளும் லட்சகணக்கான பொய் சொல்லிகொண்டிருக்கிறோம் அப்படிதானே . ஆம் இந்த பொய்யுக்காக  நபி இப்ராஹிம் அலைஹி வசல்லம் அவர்கள் மறுமைநாளில் அனைவரும் கேள்விகனக்கிர்காக நிறுத்திவைக்கப்பட்ட நிலையில் அல்லா கேள்வி கணக்கு செய்யாமல் காக்க வைத்துவிடுவான் அப்பொழுது  அந்த  மக்கள்  அனைவரும் ஒன்றிணைந்து ஆதம் அலைஹி வசல்லம் அவர்களுடன் செல்வர்கள் எங்கள் தந்தையே அல்லாஹுவிடம் பரிந்துரை செய்யுங்கள் சீக்கிரம் கேள்விகனக்கு ஆரம்பம் செய்ய கோருங்கள் என்று கூறுவார்கள் அதற்கு நமது தந்தை நானே அல்லாஹ் நெருங்க வேண்டாம் என்று சொன்ன கட்டளையை மீறி அந்த மரத்தை  நெருங்கி விட்டேன் ஆதலால் அதற்காக அல்லாஹ் என்னை பிடித்துவிடுவானோ என்று அஞ்சி பாவ மன்னிப்பு தேடிக்கொண்டிருக்கிறேன்  என்று கூறுவாராம் அதே போல் ஒவ்வொரு நபியிடமும் மக்கள் போகும்பொழுது அனைவரும் ஒரு குறை கூறி அனுபிவிடுவார்கலாம் அவர்கள்  நபி இப்ராஹிம் அலைஹி வசல்லம் அவர்களிடம் செல்லும் பொழுது அவர் கூறுவாராம் நான் என் வாழ்நாளில்  இரண்டு மூன்று பொய்யை கூறிவிட்டேன் அதார்க்காக அல்லாஹ் என்னை தண்டித்துவிடுவானோ என்று அஞ்சி பாவ மன்னிப்பு தேடிக்கொண்டிருக்கிறேன் என்று அனுப்பி விடுவாராம் அனைவரும் அனுப்பி இறுதியாக நமது கண்மணி நாயகம் முஹம்மத் சள்ளலாஹு அலைஹி வசல்லம் அவர்களிடம் வந்த பொழுது நமது கருணை நபி அல்லாஹுவின் அருசிர்க்கு கீழ் சுஜூதில் விழுந்து விடுவார்கள் அல்லாஹ் எவ்வளவு காலம் நாடுகிறானோ அவ்வளவு காலம் சுசூதிலே போட்டுவிடுவான் பிறகு அல்லாஹ் நபி முஹம்மதே உங்கள் தலையை உயர்த்துங்கள் நீங்கள் விரும்பியதை தருகிறேன் உங்கள் பரிந்துரையை ஏற்கிறேன் என்று கூறுவான் அப்பொழுது நமது நாயகம் சள்ளள்ளஹு அலைஹி வசல்லம் அவர்கள் யா அல்லாஹ் கேள்விகணக்கை அரம்பிபாயாக மக்கள் சிரமத்தில் இருக்கிறார்கள் என்று மாஷா அல்லாஹ் எல்லா நபிமார்களும் நம்மை விட்டுவிட்டாலும் நமது நாயகம் நம்மை விடுகிறவர்  அல்ல என்பதை நாம் என்றாவது உணர்ந்திருக்கிறோமா அல்லாஹ் எங்களது நபியை நீ மேல்மேலும் கண்ணியபடுத்துவாயாக ஆமீன் இவ்வாறு நபி இப்ராஹிம் அலைஹி வசல்லம் அவர்கள் தனது இந்த சிறு பொய்யிர்காக  அல்லாஹுவிடம் பாவ மன்னிப்பு கோரி கொண்டிருப்பார்கள் .

பின்பு அவர்கள் ஊர்மக்கள்   அனைவரும் திருவிழாவிற்கு சென்றவுடன் நமது தந்தை  நபி இப்ராஹிம் அலைஹி வசல்லம் அவர்கள் அந்த சிலைகள் இருக்கும் இடத்திற்கு சென்றார்கள் பிறகு அங்கு உள்ள சிலைகளிடம் இந்த உனக்காக தானே இவர்கள் உணவுகளை படையலாக வைத்திருக்கிறார்கள் இந்த சாப்பிடு என்று அந்த சிலைகளிடம் கூறினார்கள் உங்களைத்தானே இந்த மக்கள் கடவுள்  என்று நம்பிக்கொண்டு இருக்கிறார்கள் என்று ஒவ்வொரு சிலையாக அடித்தார்கள் பேசு பேசு என்று பிறகு அணைத்து சிறிய சிலைகளையும் உடைத்து விட்டு பெரிய சிலையை மட்டும் விட்டு வைத்து விட்டார் பிறகு அம்மக்கள் அந்த சிலைகளை கண்டவுடன் கோவம் தலைகேறி அனைவரும் இதனை யார் செய்திருப்பார்கள் என்று வினவ ஆரம்பித்துவிட்டார்கள் பிறகு அவர்களில் சிலபேர் இப்ராஹிம் என்ற வாலிபன் தான் இவ்வாறு செய்திருப்பான் என்று முடிவு  செய்து நபி இப்ராஹிம் அலைஹி வசல்லம் அவர்களை அழைத்து இதனை நீதானா செய்தாய் என்று வினவினார்கள்

அதற்க்கு நமது தந்தை நபி இப்ராஹிம் அலைஹி வசல்லம் அவர்கள் என்ன என்னிடம் கேட்கிறீர்கள் உடைபட்டு கிடக்கும் உங்கள் கடவுல்களிடமே கேளுங்கள் எனக்கு என்னமோ இந்த பெரிய சிலையை வைத்துவிட்டு நீங்கள் சிறிய தெய்வங்களை வணங்குகுவதால் அந்த பெரிய சிலை நீங்கள் இல்லாத சமையம் பார்த்து அந்த சிறிய சிலைகளை எல்லாம் உடைத்துவிட்டது என்று நினைக்கிறன் அதற்கு அக்கூட்டத்தார்கள் அது எப்படி உடைக்கும் என்று வினவினார்கள் அதைத்தானே இவ்வளவு நாளா நான் உங்களிடம் கேட்டுகொண்டிருந்தேன்  இப்பொழுது நீங்களே அவ்வாறு கூறுகிறீர்கள் என்று கூறினார் பிறகு அவர்கள் கோபம் தாளாமல் அரசனிடம் இவ்வழக்கு சென்றுவிட்டது அப்பொழுது நம்ரூத் என்ற அரசனிடம் நமது நபி இப்ராஹிம் அலைஹி வசல்லம் அவர்களை கொண்டு சென்றார்கள் அம்மக்கள் அந்த நம் நம்ரூத் என்ற மன்னனை பற்றி நபி சள்ளள்ளஹு அலைஹி வசல்லம் கூறியதாக உலமாக்கள் கூறுகிறார்கள் உலகத்தையே ஆண்டவர்கள் நான்கு பேர் அதில் இரண்டுபேர் முஸ்லிம் இரண்டுபேர் மற்றவர்கள்  அதில் ஒருவர் நம்ரூத் மற்றொருவர் புக்த நசர்  முஸ்லீம்களில் ஒருவர் சுலைமான் அலைஹி வசல்லம் மற்றொருவர்  சிக்கந்தர் துல்கர்னைன் (alexandar) என்று அழைக்க படுகிறார் .

இவ்வாறு உலகத்தை ஆண்ட மன்னன் நம்ரூத் என்ற கொடுகோல் மன்னனிடம் இந்த வழக்கு வருகிறது அப்பொழுது அந்த மன்னன் இந்தியாவில்  இன்று நடப்பதுபோல் விசாரணையே கிடையாது அனைத்து  மக்களின் மனத்திருப்திக்காக இன்று அப்சல் குரு மற்றும் இதுவரை வெளிவராத பல முஸ்லீம்களை எவ்வாறு செய்தார்களோ அதை போல் அந்த மன்னன் ஒரு பெரிய தீகுண்டத்தை வளர்த்து அதில் நபி இப்ராஹிம் அலைஹி வசல்லம் அவர்களை அதில் எரிய விட்டுவிடுவோம் என்று முடிவு செய்தார்கள் . அந்த தீக்குண்டம் எவ்வாறு உருவாக்கப்பட்டது என்றால் மக்கள் அனைவருக்கு அறிவிப்பு செய்து இப்ராஹீமை தீயில் இட மக்கள் அனைவரும் விறகுகள் சுமந்து வந்து அதில் எரிய வைக்க முடிவு செய்தார்கள் .

அவ்வாறு ஒவ்வொருவரும் தனக்கு இயன்ற அளவிற்கு விறகுகளை சுமந்து தீயை எரியவிட்டவுடந்தான் தெரிகிறது அது கிட்ட சென்றாலே அனைவரையும் கரிக்கி விடும் என்று எவ்வாறு நபி இப்ராஹிம் அலைஹி வசல்லம் அவர்களை தீயில் எறிவது என்று முடிவு செய்து கைசான் என்ற அந்த அரசாட்சியின்  அரசவை கவிஞன் மஞ்சநீக் என்ற கருவியை உருவாக்கினான் அதில் வைத்து அவர்களை அந்த தீயில் எரிய முடிவு செய்தார்கள்  .

அந்த கருவியில் நபி இப்ராஹிம் அலைஹி வசல்லம் அவர்களை கட்டியபொழுது ஜிப்ரஹீல் அலைஹி வசல்லம் அவர்களிடம் வந்து நபியே எதாவது உதவி வேணுமா சொல்லுங்க என்று கேட்டார்கள் ஜிப்ரஹீல் அலைஹி வசல்லம் அவர்கள் எதகயவர்கள் என்றால் அவருக்கு அல்லாஹ் அறுபது ரெட்க்கைகளை  கொடுத்திருந்தான் அதில் ஒரு ரெட்க்கையை  வைத்து அதன் நுனியில் இந்த பூமியை அப்படியே திருப்பி போடும் அளவிற்கு ஆற்றல் உடையவர்கள் என்று மார்க்க அறிஞர்கள் குறிப்பிடுகிறார்கள். மாஷா அல்லாஹ் அத்தகைய மலக்கு நபி இப்ராஹிம் அலைஹி வசல்லம் அவர்களிடம் கேட்கிறார்கள்  ஆனால் அல்லாஹு அக்பர் அவர் கூறிய வார்த்தை "ஹஸ்புனல்லாஹ் நாமுள் வக்கீல் " என்னை பொறுபேற்க அல்லாஹுவே போதுமானவன் என்று கூறி ஜிப்ரகீலே நீயும் அல்லாஹுவின் படைப்பு நானும் அல்லாஹுவின் படைப்பு படைப்புக்கு படைப்பு உதவி செய்ய இயலாது நம்மை படைத்தவன் உதவி செய்வான் என்று கூறினார்கள்

மேலும் அந்த கருவியை இயக்கியவுடன் அதனை இயக்கிய அந்த அரசவை கவிஞன் பூமி விரிந்து அதற்குள் புகுந்துவிட்டான் அவன் கியாமத் நாள் வரை ஒவ்வொரு அடியாக உள்ளே சென்றுகொண்டிருப்பான் என்று நமது நபி சள்ளலாஹு அலைஹி வசல்லம் அவர்கள் கூறியதாக மார்க்க அறிஞர்கள் கூறுகிறார்கள் அனைத்தையும் அல்லாஹ்வே அறிந்தவன் . மேலும் அந்த கருவியை இயக்கியும் விட்டான் அப்பொழுதும் ஜிப்ரஹீல் அலைஹி வசல்லம்
நபி இப்ராஹிம் அலைஹி வசல்லம் அவர்களிடம் நபியே கூறுங்கள் இப்பொழுது உதவி வேண்டுமா என்று அப்பொழுது ஹஸ்புனல்லாஹ் அப்பொழுது மழைக்கான  மலக்கு அவர்கள் ஜிப்ரஹீலிடம் என்ன செய்யவேண்டும் மழையை பொழிய செய்யவேண்டுமா என்று அப்பொழுது ஹஸ்புனல்லாஹ் அப்பொழுது அல்லாஹ் கட்டளையிட்டான்  அந்த மழையின் மலக்கிடம் அல்ல  அந்த நெருப்பிர்கே கட்டளை இட்டான் நெருப்பே நீ இப்ராஹிமுக்கு சலாமத் தரக்கூடிய குளிரை மாறிவிடு என்று . இதனை பற்றி இப்ன் அப்பாஸ் ரலியல்லாஹுதால இந்த வசனத்திற்கு விளக்கம் கூறும்பொழுது கூறுகிறார்கள் அல்லாஹ் மட்டும் சலாமத் என்ற வார்த்தை கூறாமல் பர்தன்(குளிர்ச்சி ) ஆகிவிடு என்று கூறியிருந்தால் அந்த நெருப்பு கடுமையான குளுராக  நபி இப்ராஹிம் அலைஹி வசல்லம் அவர்களுக்கு  சிரமம் தந்திருக்கும் என்று விளக்கம் தருவதாக உலமாக்கள்  கூறுகிறார்கள் . இவ்வாறு நபி இப்ராஹிம் அலைஹி வசல்லம் அவர்கள் நெருப்பிற்குள் இருந்து சிரித்துகொண்டிந்ததை கண்டு அம்மக்கள் அட்சர்யபட்டர்கள் அவருடைய தந்தை தன்னை அறியாமலேயே  என் மகனே உன்னுடைய  ரப்பு விசேசமான ரப்புதான் என்று கூருவிடுகிரார்கள் அனால் அவர் இஸ்லாத்தை ஏற்க்கவில்லை அதனை கண்ட மக்கள் அனைவரும் இனி இவரை ஒன்றும் செய்ய இயலாது என்று கூறிவிட்டு போய்விடுகிறார்கள்

ஆனால் நபி இப்ராஹிம் அலைஹி வசல்லம் அவர்களோ அந்த நெருப்பில்  இருந்து இரங்கி நேராக அரசனின் கூடாரத்திற்கு சென்றுவிட்டார்கள் அங்கு சென்று நம்ரூதே நீ அல்லாஹ் ஒருவனையே  வணக்கத்திற்கு உரியவனாக ஏற்றுகொள் என்று கூற அவன் நபி இப்ராஹிம் அலைஹி வசல்லம் அவர்களிடம் உன் ரப்பு என்ன செய்கிறான்  என்று கேட்டான் அதற்கு நபி இப்ராஹிம் அலைஹி வசல்லம் அவர்கள் எனது ரப்பு  உயிரை கொடுக்கிறான் பிறகு மரணத்தையும் கொடுக்கிறான் என்று கூறினார் அதற்கு அந்த மன்னன் என்ன உன்னுடைய ரப்பு உயிரையும் மரத்தையும் கொடுக்கிரார்ணா நான் தான் உயிரையும் மரணத்தையும் கொடுக்கிறேன் என்று கூறினான் அதற்கு நபி இப்ராஹிம் அலைஹி வசல்லம் அவர்கள் எவ்வாறு என்று கேட்க அங்கு இருந்த ஒருகாவலாளியை  அழைத்து அவனை கொன்றுவிட்டு பிறகு ஒரு மரண தண்டனை கைதியை அழைத்து நீ சுதந்திரமாய் செல் என்று கூறினான் பார்த்தீர நான் உயிரையும் எடுத்தேன் மற்றும் உயிரையும் கொடுத்தேன், நமது நபி இப்ராஹிம் அலைஹி வசல்லம் அவர்கள் அப்படியா சரி எனது ரட்சகன் சூரியனை கிழக்கிலிருந்து உதயமாக்குகிறான் நீ ரப்பாக இருந்தால் மேற்கிலிருந்து கொண்டு வா பார்போம் என்று கூறியவுடன் அம்மன்னன்  திகைத்து விட்டான். 
பிறகு அந்த ஊரிலேயே தங்கி இருந்தார்கள் பிறகு நபி இபுறாஹீம் அலைஹி வசல்லம் அவர்களுக்கு ஒரு சந்தேகம் எழுந்தது அல்லா எவ்வாறு நம்மை உயிர்பிப்பன் என்று அல்லாஹுவிடமே கேட்டு விடலாம் என்று முடிவு செய்து  அல்லாஹுவிடம் நபி இபுறாஹீம் அலைஹி வசல்லம் அல்லாஹுவிடம் கேட்டார்கள் அல்லாஹ் நீ மனிதர்களை எவ்வாறு உயிர்பிப்பாய் என்பதை நீ எனக்கு கான்பிபாயாக என்று கேட்டபொழுது அல்லாஹ் கேட்டான் ஏன் நபினே நீங்கள் நம்பவில்லையா என்று கேட்டான் அதற்கு நபி இபுறாஹீம் அலைஹி வசல்லம் அவர்கள் ஏன் இல்லை என் இதயம் அமைதிபெருவதர்க்காக கேட்கிறேன் என்று கூறினார் , அதற்கு அல்லாஹ் நபியே நீர் வேறு வேறு பறவைகளாக நான்கு பறவைகளை பிடித்து  அதனை வெட்டி பிறகு அதன் மாமிசத்தை கலந்து  மலைகளில் சிறுக சிறுக வைத்துவிடுங்கள்  என்று  கூறினான் அவ்வாறே நபி இபுறாஹீம் அலைஹி வசல்லம் அவர்கள் செய்தார்கள் பிறகு அல்லா கூறினான் நபியே இப்பொழுது அந்த பறவையின் பெயரை அலைபாயாக  என்று அவ்வாறே அழைக்க அந்த பறவையின் மாமிசங்கள்  ஒன்றிணைந்து பறவையாக உருமாறி நபியிடம் வந்ததாக அல்லா தனது திருமறையில் சாட்சி கூறுகிறான் .மேலும் இதை நடத்திவிட்டு அல்லா கூறுகிறான் நபியே இதன் மூலம் நீர் அறிந்துகொல்வீராக அல்லாஹ்  தீர்கமான அறிவுடையவன் அணைத்து பொருளிலும் ஆற்றல் உடையவன் என்று ..

இவ்வாறு நபி இபுறாஹீம் அலைஹி வசல்லம் அவர்களது தனிப்பட்ட வரலாறை நாம் பார்த்தோம் இன்ஷா அல்லாஹ் அடுத்த பத்திப்பில் நபி இபுறாஹீம் அலைஹி வசல்லம் அவர்களும் அவர்களுடைய புதல்வர்கள் மேலும் அவர்களுடைய த்யாகங்கள் போன்றவற்றை இன்ஷா அல்லா காண்போம் .. இவைகள் அனைத்தையும் மாற்று மத நண்பர்களும் படிக்க வேண்டும்  என்பதற்காக இதனை கதைவடிவில் அமைத்திருக்கிறேன் இவைகளில் ஏதேனும்  உங்களுக்கு சந்தேகம் எழுந்தால் அல்லாஹுவிர்க்காக என்னிடம் கேட்டு விடுங்கள் இதில் தவறை நீங்கள்  கண்டால் அதனை தெரிவித்துவிடுங்கள் அல்லாஹ் ரஹ்மத் செய்வானாக "எவர் ஒரு பாதையில் இல்மைத் தேடிப் புறப்படுகிறாரோ, அவருக்கு அல்லாஹ் சுவர்க்கத்தின் பாதையை இலேசாக்குகிறான். மலக்குகள் இல்மைத்தேடக்கூடியவருக்காக அவரின் செயலால் சந்தோஷமடைந்து தங்கள் இறக்கைகளை விரித்து வைக்கிறார்கள். " என்று நமது நாயகம் சள்ளலாஹு அலைஹி வசல்லம் கூறியதாக அபுதர்தா ரலி யல்லாஹுஅன்ஹு அறிவித்ததாக ஹதீத் நூல்ஹளில் பதிவாகி உள்ளது .. நாம் இதனை வெறும் கதையாக பாரமால் இது உண்மைதானா என்று அல்லாஹுவின் அருள்மறையில்  தேட முற்படுவோம் அல்லாஹ் சொர்கத்தின் பாதையை இலகுவக்குவான் இன்ஷா அல்லாஹ் .

இதில் எனக்கு அறியாத பல சம்பவங்கள் உள்ளது என்பதே உண்மை ஆதலால் நாம் நம் வரலாறுகளை தேட முற்படுவோம் . இல்லையென்றால் நம் சுய அடையாளத்தை தொலைத்து வெறும் ஜடமாக வாழும் நிலைமை ஏற்பட்டாலும் அச்சரியம் இல்லை ஏன் என்றால் இன்றைய இந்திய முஸ்லீம்களின் நிலை அதுதான்


யா அல்லாஹ் நாங்கள் எதனை அறிய முற்பட்டோமோ அதனை எங்களுக்கு மேலும் மேலும் தெளிவு படுத்துவாயாக ஆமீன்
யா அல்லாஹ் எங்களுக்கு வலுவான ஈமானை வழங்குவாயாக  ஆமீன்
யா அல்லாஹ் எங்களுக்கு இந்திய முஸ்லீம்களுக்கும் பாலஸ்தீனில் உன்னுடைய எதிரிகளான யூத நாசராநிகளிடம்  போர் புரியும் என் தாய்ம்மார்கள் தந்தைமார்கள் என் சகோதரிகள் என் சகோதரர்கள் மேலும் என் சொந்தம்மான பிஞ்சிலேயே உனக்காக சஹீத் என்னும் உயர் அந்தஸ்திற்காக  போராடிக்கொண்டிருக்கு குழந்தைகள் மேலும் காஸ்மீரில் இராக்கில் சிரியா வில் பர்மாவில் அஸ்ஸாமில் குஜராத்தில்  போன்ற உலகம் முளுவதும் உன் தீனுக்காக போராடிக்கொண்டிருக்கும் அனைத்து சகோதரர்களுக்கும் வெற்றியை வழங்குவாயாக . ஆமீன் அவர்களையும் அவர்களின் உடமைகளையும் பாதுகாப்பாயாக ஆமீன்
எங்களை யூத நாசராநிகளின் மற்றும் சைத்தானின் சூழ்ச்சிகளில் எங்களை பாதுகாப்பாயாக ஆமீன்
மரணிக்கும் பொழுது முஸ்லீமாக மரணிக்கும் பாக்கியத்தை தந்தருள் வாயாக  ஆமீன் ஆமீன் யா ரப்பல் ஆலமீன்

இன்ஷா அல்லாஹ் எதை  தெரிந்துகொண்டோமோ அதன் படி  அமல் செய்யும் தௌபிக்கை அல்லாஹ் தண்டருல்வானாக ஆமீன்
யா அல்லாஹ் குரானுடன் எங்கள் அனைவரையும் தொடர்பு படுத்துவாயாக ஆமீன் யா ரப்பல் ஆலமீன்

நண்பர்களே படித்து உங்களது நண்பர்குக்கு இந்த பதிவுகளை பற்றி எத்தி வையுங்கள் அவர்களை இந்த பக்கத்தில் இனைய வேண்டுகோள் விடுங்கள் அல்லாஹ்  ரக்மதுசெய்வானாக ஆமீன் ஆமீன் யா ரப்பல் ஆலமீன்

வாஹிர்தவான அல்ஹம்துலில்லாஹி  ரப்பில்  ஆலமீன்

அஸ்ஸலாமு அழைக்கும் வ ரஹ்மத்துல்லாஹி வ பரக்காத்துஹு 



நபி சாலிஹ் அலைஹி வசல்லம் அவர்களது வரலாறு



அஸ்ஸலாமு அழைக்கும் வரஹ்மத்துல்லாஹி வ பரக்காத்துஹு

பிஸ்மிள்ளாகிர் ரஹ்மானிர் ரஹீம்

நண்பர்களே நாம் வரலாறு பதிவின் தொடர்ச்சியில் இன்றைய தினம் நபி ஹல்ரத் சாலீஹ் அலைஹி வசல்லம் அவர்களின் வரலாறை காண விருக்கிறோம்  இன்ஷா அல்லாஹ்  அல்லாஹ் இதன் மூலம் உள்ள படிப்பினைகளை அல்லாஹ் நமக்கு விளங்க வைப்பானாக  ஆமீன் ஆமீன் யா ரப்பல் ஆலமீன்

ரப்பி சித்னி இல்மன்

யா அல்லாஹ் எங்களது  அறிவாற்றலை அதிகப்படுத்தி தருவாயாக ஆமீன்

ஹல்ரத் நபி  சாலீஹ் அளஹி வசல்லம் அவர்கள் அரபி மொழிக்காக அனுப்ப பட்ட நான்கு தூதர்களில் ஒருவர் . இவர் மதினாவிற்கும் தபூக்கிர்க்கும் இடையில் உள்ள ஹிஜ்ர் என்ற ஊரில் வாழ்ந்த சமூத் எற்ற கூட்டத்திற்காக அனுப்பப்பட்ட நபி . இவர் தனது ஏகத்துவத்தை எடுத்துரைக்கும் முன் அவர்களது சமூகத்தார்கள் இவரை அறிவுஜீவியாகவும் நல்ல பண்புடயவகராகவும் கண்டார்கள் அனால் எப்பொழுது அல்லாஹ் ஒருவனே என்று கூறினார்களோ அன்றிலிருந்து  அவர் அவமதிக்கப்பட்டவர்கலாகவே இருந்தார்கள் . மேலும் இந்த நிலை  சாலிஹ் அலைஹி வசல்லம் அவர்கள் மட்டும்  ஏற்படவில்லை அல்லாஹ்வால் அனுப்பப்பட்ட நபிமார்கள் அனைவரின் சமூகத்தார்களும் இவ்வாரே கூறுகிறார்கள் மேலும் நமது ஹபீப் முஹம்மத் சள்ளலாஹு அலைஹி வசல்லம் அவர்களின் வாழ்விலும் அரங்கேறியுள்ளது அல்லாஹ் நமது ஹபீப் முஹம்மத் சள்ளலாஹு அலைஹி வசல்லம் அவர்களுக்கு நபியே உமது குடும்பத்தார்களுக்கு  அச்சமூட்டி எச்சரிக்கை செய்வாயாக என்ற வசனத்துக்கு இணங்க அல்லாஹுவின் தூதர் தனது குடும்பத்தார்கள் அனைவரையும் ஒன்று திரட்டினார்கள் அவர்களிடம் இப்பொழுது இந்த மலைக்கு பின்னால்  ஒருகூட்டம் உங்களை தாக்கவருகிறது  என்று கூறினால் என்னை நம்புவீர்களா என்று நமது ஹபீப் முஹம்மத் சள்ளலாஹு அலைஹி வசல்லம் அவர்களது குடும்பத்தார்களிடம் கேட்டார்கள் அதற்கு அவர்களின் பதில் " முஹம்மதே (சள்ளலாஹு அலைஹி வசல்லம் ) உங்களை நாங்கள் பொய் சொல்பவர்களாக கண்டதில்லை நீங்கள் எங்கள் மத்தியில் மிகவும் கண்ணியமானவராக இருக்கிறீர்கள் ஆதலால் உங்களை நம்பிக்கை கொள்வோம்  என்று கூறினார்கள்  அப்பொழுது நமது ஹபீப் முஹம்மத் சள்ளலாஹு அலைஹி வசல்லம் அவர்கள் கூறினார்கள் லாஇலாஹ இல்லல்லாஹ் " வணக்கத்திற்குரிய நாயன் அல்லாஹ்  ஒருவன்தான் அவனையன்றி யாரும் இல்லை அல்லாஹ் அவன் சிலை அல்லாஹ் அவன் கல்லல்ல என்று கூறினார்கள் அதற்கு கூடும்பதார்கள் உன் கைகள் நாசமாகட்டும் ஔதுபில்லாஹ் . என்ன வார்த்தை அல்லாஹ் எங்கள் நாயகத்தை நீ மிகவும் கண்ணிய படுத்துவாயாக ஆமீன் . மேலும் நமது  ஹபீப் முஹம்மத் சள்ளலாஹு அலைஹி வசல்லம் மக்களிடம் ஏகத்துவ பிரசாரத்தை ஆரமித்தார்கள் அப்பொழுது அந்த மக்கள் அபுதாலிபிடம் " அபூதாலிபே உனது சகோதரனின் மகனை அமைதியாக இருக்க சொல் அவர் மக்கா  வாசிகளில் குழப்பத்தை உண்டு பண்ணிகொண்டிருக்கிறார் நமது மக்களிடையே   பகைமையை ஏற்படுத்துகிறார்   பயந்துகொள்ள சொல் என்னவேண்டும் அவருக்கு மக்காவின் ஆட்சி வேண்டுமா மக்காவின் அழகிய பெண்கள் வேண்டுமா தருகிறோம் அவரை இப்பிரச்சாரத்தை விட்டு நீங்க சொல் . அபுதாலிப் நமது ஹபீப் முஹம்மத் சள்ளலாஹு அலைஹி வசல்லம் அவர்களிடம் முஹம்மதே  என்னை நெருக்கடிக்கு ஆளாக்கி விடாதிர் விட்டுவிடு மகனே   அதற்கு  நமது ஹபீப் முஹம்மத் சள்ளலாஹு அலைஹி வசல்லம் அவர்கள் என் தந்தையே எனது வலது கரத்தில் சூரியனை கொடுத்தாலும் எனது இடது கரத்தில் சந்திரனை கொடுத்தாலும் இதை  சொல்வதால் நான் கொல்லப்பட்டாலும் சரியே நான் இதை விட்டு நீங்க மாட்டேன் .. அல்லாஹு அக்பர் . அல்லாஹுவால் அனுப்பப்பட்ட அனைத்து நபிமார்களும் இந்த சிரமம்தான் அடைந்திருக்கிறார்கள்

மேலும் நபி சாலிஹ்  அலைஹி வசல்லம் அவர்களது சமூகமான  சமூது கூட்டம் எத்தகயவர்கள் என்றால் அவர்கள் பள்ளத்தாக்கில் மலைகளை குடைந்து அவர்கள் கூடாரம் அமைத்திருந்தார்கள் என்பதை அல்லாஹுவே சாட்சி கூறுகிறான்

" இன்னும் பள்ளத்தாக்கில் பாறையை குடைந்து வசித்துவந்த சமூது கூட்டத்தையும் "(காணவில்லையா)

அழ பஜ்ர் 89 -9



மேலும் நபி சாலிஹ் அலைஹி வசல்லம் அவர்கள் தனது சமூகதார்களை பார்த்து எனது சமூகமே  நீங்கள் அல்லாஹ் ஒருவனையே வணங்குங்கள் அவனையன்றி வணக்கத்திற்கு உரிய நாயன் வேறு இல்லை  அவனுக்கே அஞ்சுங்கள் எனக்கு  கீழ்படியுங்கள்   என்று அணைத்து நபிகலைபோல் அவர்தனது பிரசாரத்தை துவங்கினார் , மேலும் அவர்கள் அம்மக்களிடம் எனது சமூதார்களே அகிலதாரின் இரட்சகனான அல்லாஹுவையே வணங்குங்கள் அவனே உங்களை இப்பூமியில் இருந்து உண்டாக்கினான்   அதிலேயே உங்களை வாசிக்கவும் செய்தான் ஆதலால் நீங்கள் அவனிடமே பிளைபொறுப்பு தேடுங்கள் தவ்பா செய்து அவன்பக்கமே நீங்கள் திரும்புங்கள் என்று கூறினார்கள் மேலும் அவர் நிச்சயமாக எனது ரட்சகன் சமீபமானவன் பாவமன்னிப்பை ஏற்றுகொல்பவனாக இருக்கிறான்  என்று  கூறினார்கள்

அதற்கு அந்த மக்கள் கூறினார்கள் ஷாலிஹே (அலைஹி வசல்லம் ) இதற்கு முன்னால் உங்களை நாங்கள் எங்களது விருப்பதுக்கூரிய அறிவுஜீவியாகவே நாங்கள் உங்களை கண்டிருந்தோம் ஆனால் நீங்கள் எங்கள் மூதாதையர்கள் வணங்கிகொண்டிருந்த அந்த சிலைகளை நாங்கள் வணங்குவதை விட்டு எங்களை தடுக்க நினைகிறீரா . மேலும் நீர் எதன் பக்கம் அலைகிரீரோ நிச்சயமாக நாங்கள் அதை சந்தேகிதவர்கலாகவே இருக்கிறோம் என்று கூறினார்கள் . அம்மக்கள் சாலிஹே உனக்கு யாரோ சூனியம் செய்துவிட்டார்கள் என்று அம்மக்கள் ஏளனம் செய்தார்கள் .

அதற்கு சாலிஹ் அலைஹி வசல்லம் அவர்கள் எனக்கு அல்லாஹுவுடன்  இருந்து நல்லுபதேசம் வந்ததே தவிர வேறு இல்லை நான் உங்களை நல்வளியின் பக்கம் அழைக்க ஆனால் நீங்களோ என்னை  வழிகெட்ட கூட்டத்தினரின் பக்கம் அலைகிறீர்கள் மேலும் அவர் அல்லாஹ்  அவன் புறத்திலிருந்து அருளை எனக்கு கொடுத்திருக்க நான் அவனுக்கு மாறு செய்தால் அதற்கு அவன் என்னை தண்டிக்கும் தருவாயில் அவனிடமிருந்து என்னை காப்பாற்றுபவன் யார் ? நீங்கள் அனைவரும் எனக்கு நஷ்டத்தை தவிர வேறு எதையும் எனக்கு அதிகமாக்கிவிடமாட்டீர் என்று கூறினார்

அதற்கு அம்மக்கள் எங்களுக்கு நீங்கள் நபிதான் என்பதை நிரூபிக்க ஒரு அத்தாட்சியை கொண்டுவாரும் என்று கூறினார்கள் இதற்கு இதனை பற்றி மார்க்க அறிஞர்கள் குறிப்பிடுகிறார்கள் அந்த சமூத் குட்டதிளிருந்து ஒரு மனிதர் ஒரு கல்லை காண்பித்து இந்த கல் பிளந்து ஒரு சினையான ஒட்டகம் வரவேண்டும் அந்த ஒட்டகம் எங்கள் கண்முன்னால் வைத்து தனது குட்டியை வெளியாக்க வேண்டும் அவ்வாறு  நீர் கொண்டு வந்தால் நான் உன்னுடைய செய்தியை ஏற்று  கொள்கிறேன் என்று கூறினான் பிறகு அதனை நமது தந்தை சாலிஹ் அலைஹி வசல்லம் அல்லாஹுவிடம் மன்றாடி அதனை அத்தாட்சியாக  கொண்டுவந்ததாக வரலாற்று ஆசிரியர்கள் குறிபிடுகிறார்கள் . மேலும் சாலிஹ் அலைஹி வசல்லம் அவர்கள் இதோ  அல்லாஹுவின் அத்தாட்சியான ஒட்டகம் இதனை நீங்கள் துன்புறத்த நினைக்காதீர் அதனை அதன் போக்கிலே விட்டுவிடுங்கள் என்று கூறினார் மேலும் இதனை நீங்கள் துன்புறுத்தினால் அல்லாஹ்வில் தண்டனை வெளிப்பட்டுவிடும் அதற்கு அஞ்சிகொல்லுங்கள்  என்று எச்சரித்தார் . ஆனால் அம்மக்கள் அந்த ஒட்டகத்தை  துன்புறுத்த  நாடினார்கள் அதனிலும் அக்கூட்டத்து பெண்கள் அதில் மும்புரமாக இருந்தார்கள் .

மேலும் அந்த நிராகரிக்கும் கூட்டதார்களின் பிரதானிகள் சாலிஹ் அலைஹி வசல்லம் அவர்களை விசுவாசம் கொண்ட அந்த நன் மக்களிடம் " நிச்சயமாக இந்த சாலிஹ் இறைவனால் அனுப்பப்பட்ட துதரென நீங்கள் உறுதியாக அறிவீர்களா என்று வினவினார்கள் அதற்கு அந்த நன்மக்கள் நிச்சயமாக அவர் எதை கொண்டு விசுவாசம் கொண்டாரோ  அத்தூதை  விசுவாசம் கொள்பவர்களாக உள்ளோம் என்று கூறினார்கள் அதற்கு அந்த கர்வம் கொண்ட அந்த கூட்டத்தின் தலைவர்கள் நீங்கள் நிச்சயமாக எதை விசுவாசம் கொள்கிறீர்களோ அதை நிச்சயமாக  நாங்கள் நிராகரிக்க கூடியவர்கள்  என்று கூறினார்கள்

அதற்கு அந்த சமூது கூட்டத்தார்கள் சாலிஹ் அலைஹி வசல்லம் அவர்களிடம் நிச்சயமாக நாங்கள் உம்மையும் உம்மை பின்பற்றும் அந்த   மக்களையும் துர்ச்சகுனமாகவே கருதுகிறோம் என்று கூறினார்கள் அதற்கு சாலிஹ் அளஹி வசல்லம் உங்கள் துர்ச்ச குணம் (அதன் காரணம் ) அல்லாஹுவிடமே இருக்கிறது மாறாக நிச்சயமாக அல்லாஹுவினால் சோதனைக்கு உள்ளாக்கப்படும் சமூகமாகவே இருக்கிறீர்கள்  என்று கூறினார்கள்

அதற்கு அந்த மக்கள் கூறினார்கள் நீங்கள் உண்மையாளர்களாக இருந்தால் நீங்கள் வாக்களித்த அந்த வேதனையை எங்களுக்கு கொண்டுவரவும் என்று கூறினார்கள்

அதற்கு நம் தந்தை சாலிஹ் அலைஹி வசல்லம் அவர்கள் என் சமூகத்தாரே நன்மைக்கு முன்னாள் என் தீமையை எதிர் கொள்ள அவசர படுகிறீர்கள் .நீங்கள் அல்லாஹுவிடம் பாவமன்னிப்பு கோர வேண்டாமா அதன்மூலம் நீங்கள் அல்லாஹுவின் பொருத்தத்தை பெறலாமே என்று கூறினார் .


மேலும் அல்லாஹ் தனது திருமறையிலே சாட்சி அளிக்கிறான் மேலும் அக்கூட்டத்தில் ஒன்பது நபர்கள் உள்ளார்கள் அவர்கள் இந்த பூமியில் குழப்பம் செய்பவர்களாகவே இருந்தார்கள் அவர்கள் ஒன்பது நபர்களும் சேர்ந்து ஓர் திட்டம் தீட்டினார்கள் அல்லாஹ் அத்தாட்சியில் உள்ள அந்த பெண் ஒட்டகத்தை நம் ஒன்பது பேர்களும் சேர்ந்து அதனை கொன்று விடுவோம் என்று கூறினார்கள் அவ்வொரு நபரும் பாலமாதிரியாக சூழ்ச்சிகள் செய்து அந்த ஒட்டகத்தில் கால் நரம்பை அறுத்துவிட்டார்கள் . மேலும் அதனை கொலையும் செய்து விட்டார்கள்  அதனை கண்ட சாலிஹ் அலைஹி வசல்லம் அவர்கள் கூறினார்கள் அல்லாஹுவின் அத்தாட்சியை பொய்யாக்கி விட்டீர்கள் இதனால் நீங்கள் கண்டிப்பாக வேதனை அனுபவிப்பீர் .

மேலும் அவர்கள் மற்றொரு சூழ்ச்சியை செய்தார்கள் சாலிஹ் அலைஹி வசல்லம் அவர்களையும் அவர்களது குடும்பத்தினரையும்  இரவோடு இரவாக நாம் அவர்களை அழித்துவிடுவோம் என்று நீங்கள் அனைவரும் அல்லாஹுவை கொண்டு சத்தியம் செய்து கொள்ளுங்கள் பின்னர் அவர்களது பாதுகாவலர்களிடம் நிச்சயமாக அவர்கள் அளிக்கப்பட்ட இடத்திற்கு நாங்கள் வரவேயில்லை என்று திட்டமாக கூறிவிடுவோம் என்று ஒரு சூழ்ச்சியை அவர்களுக்குள் ஒப்பந்தம் செய்துகொண்டார்கள் மேலும் அல்லாஹ் கூறுகிறான் இதுபோல இவர்களும் சூழ்ச்சி செய்தார்கள் அதனை முறியடிக்க வேதனையை கொண்டு அல்லாஹுவாகிய அவன் சூழ்ச்சி செய்தான் என்று மேலும் அல்லாஹ் அதனை சாலிஹ் அலைஹி வசல்லம் அவர்களுக்கு அறிவித்து அவரையும் அவர்களது குடும்பத்தார்களையும் மேலும் அவரை பின்பற்றிய மக்களையும் அழைத்து செல்ல உத்தரவிட்டான்
அதன் படி செல்லும் முன் நபி சாலிஹ் அலைஹி வசல்லம் அவர்கள் நீங்கள் அல்லாஹுவிர்க்கு மாறுசெய்து அவனது அத்தாட்சிகளை பொய்யாக்கியதன் காரணமாக இன்னும் உங்களுக்கு மூன்று நாட்கள் மட்டுமே அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது என்று கூறி அல்லாஹ்விடம் பிராத்தித்து அவரும் அவரை சார்ந்தவர்களும் அந்த இடத்திலிருந்து  வெளியேறி விட்டார்கள் அல்லாஹ் எவ்வாறு அளித்தான் என்பதை விரிவாக மார்க்க அறிஞர்கள் கூறுகிறார்கள் அல்லாஹ் அந்த மூன்று அவகாச நாட்களில் முதல் நாள் அந்த மக்கள் அனைவரின் முகங்களும் சிவப்பாக மாறியது அதனை கண்டதும் அவர்கள் சற்று தர்கிக்க தொடங்கினார்கள் மேலும் சாலிஹ் அவர்கள் போகும்பொழுது நாம் அனைவருக்கு சூனியம் செய்துவிட்டார்கள் என்று நினைத்து கொண்டார்கள் இரண்டாவது நாள் அவர்களது முகங்கள்  கருப்பாக மாறிவிட்டது மேலும் அவர்களுக்கு தர்க்கம் அதிகமாக மாறியது அவர்களின் சிந்தனை பலமாரியாக மாறியது மூன்றாவது நாள் அவர்கள் அனைவரின் முகமும் மஞ்சள் நிறமாக மாரிவுட்டது அவர்களது உள்ளத்தில் ஒரு பய உணர்வு வந்துவிட்டது .
இந்த விசியத்தில் நமக்கு ஒரு படிப்பினையும் உண்டு என்று நான் கருதுகிறேன்  ஏன் என்றால் அவர்கள் தங்கள் முகங்கள் மாற மாற அவர்களின் சிந்தனைகள் சூனியமோ அல்ல, சாலிஹ் அலைஹி வசல்லம் அவர்கள் சாபமா என்று தான் சிந்தித்தார்கள் அவர்களுக்கு பாவ மன்னிப்பு கோர வேண்டும் என்ற எண்ணம் வரவே இல்லை ஏன் என்றால் உள்ளத்தின் ஆட்சியாளன் அல்லாஹ் ஒருவனே அவன் நாடினால் மட்டுமே மரணிக்கும் தருவாயில் பாவ மன்னிப்பு கோர வாய்ப்பு உள்ளது இந்த படிப்பினையை அறியாத மக்களாகவே நாம் நம் சிந்தனை நம் எண்ணம் என்று மார்தட்டி கொண்டிருக்கிறோம் அல்லாஹ் பாதுகாப்பானாக " யா அல்லாஹ் நாங்கள் மரணிக்கும் முன் பாவமன்னிப்பு கோரும் வாய்ப்பை எங்களுக்கு எங்கள் குடுபதர்களுக்கும் எங்கள் சொந்தங்களுக்கும்  உலக முஸ்லீம்களுக்கும் ஏற்படுத்தி தருவாயாக " ஆமீன் ஆமீன் யா ரப்பல் ஆலமீன் " மேலும் மூன்றாவது நாள் முடிவில் அல்லாஹ் தனது அதாபை (வேதனையை ) அல்லாஹ் இறக்கினான் ஒரே ஒரு இடி முழக்கம் தான் அவர்கள் அனைவரும் குப்புற விழுந்து இறந்து கிடந்தார்கள் "

மேலும் மார்க்க அறிஞர்கள் கூறுகிறார்கள் நமது நபி சல்லல்லாஹு அலைஹி வசல்லம் அவர்கள்  கூறியதாக இந்த கூட்டத்தில் உள்ள ஒரு ஒருவன் அவனும் அதாபு வரும் முன் சிறு வேலையாக அந்த ஊரைவிட்டு  வெளியே வந்து சாலிஹ் அலைஹி வசல்லம் அவர்களும் அவரை சார்தவர்களுடன் மாகாவின் எல்லையில் ஒரு பள்ளத்தாக்கில் தங்கி இருந்தார்கள் அவர்களுடன் அவனும் வந்து சேர்த்து இருந்தான் பிறகு அவன்  மக்காவின் எல்லையை தாண்டிய பொழுது அவனையும் இடி அழித்துவிட்டது  என்று  குறிபிடுகிறார்கள்
மேலும் சாலிஹ் அலைஹி வசல்லம் அவர்களும் அவரை சார்ந்தவர்களும் ஹஜ்ஜுக்கு சென்றதாக கூறப்படுகிறது .
மேலும் இதனை பற்றி நமது நபி முஹம்மத்  சல்லல்லாஹு அலைஹி வசல்லம் அவர்கள்  சஹாபக்களிடம்  ஹஜ்ஜுக்கு செல்லும்பொழுது ஒரு பள்ளத்தாக்கை காண்பித்து இதன் பெயர் என்ன என்று கேட்டார்கள் அதற்கு அபூபக்கர் ரலியல்லாஹு தாலா  அவர்கள் இந்த பள்ளத்தாக்கின் பெயர் வாதி அஸ்பான் (asfan) என்று கூறினார்கள் அதற்கு நமது நாயகம்   நபி சல்லல்லாஹு அலைஹி வசல்லம்  இந்த வாதி அஸ்பானில்தான் நபி சாலிஹ் அலைஹி  வசல்லம் அவர்கள் தங்கி ஹஜ்ஜு செய்ததாக கூறினார்கள் . மேலும் சாலிஹ் அலைஹி வசல்லம் அவர்கள் ஹரமின் (மக்காவின் ) எல்லைபகுதிகளிலேயே வசித்து வந்து அங்கேயே மரணித்து ஹரமின் எல்லையில் அவர்களை அடக்கம் செய்தார்கள் என்று மார்க்க அறிஞர்கள் குறிப்பிடுகிறார்கள் . அனைத்தையும் அல்லாஹுவே அறிந்தவன் . மேலும் தபூக் போருக்கு செல்லும் தருவாயில் நமது ஹபீப் முஹம்மத் சள்ளலாஹு அலைஹி வசல்லம் அவர்கள் தனது தோழர்களை பார்த்து சமூது கூட்டம் வசித்த அந்த இடத்தை கடக்கும் பொழுது அனைவரும் அலுதவர்கலாகவே வாருங்கள்  அளுகைவரவில்லை என்றால் அழுவதுபோல் பாவனையிலாவது வாருங்கள் சிரிதவர்கலாக வந்துவிடாதீர்கள் என் என்றால் அல்லாஹுவின் அதாபு உங்களையும் பிடித்து விடக்கூடும் . என்று அஞ்சினார்கள் .  
அல்ஹம்துளில்லாகிர்  ரஹ்மானிர் ரஹீம்

மாஷா அல்லாஹ் இன்றைய தினம் சாலிஹ் அலைஹி வசல்லம் அவர்களது வரலாறை பார்த்தோம் இவைகள் அனைத்தையும் மாற்று மத நண்பர்களும் படிக்க வேண்டும்  என்பதற்காக இதனை கதைவடிவில் அமைத்திருக்கிறேன் இவைகளில் ஏதேனும்  உங்களுக்கு சந்தேகம் எழுந்தால் அல்லாஹுவிர்க்காக என்னிடம் கேட்டு விடுங்கள் இதில் தவறை நீங்கள்  கண்டால் அதனை தெரிவித்துவிடுங்கள் அல்லாஹ் ரஹ்மத் செய்வானாக "எவர் ஒரு பாதையில் இல்மைத் தேடிப் புறப்படுகிறாரோ, அவருக்கு அல்லாஹ் சுவர்க்கத்தின் பாதையை இலேசாக்குகிறான். மலக்குகள் இல்மைத்தேடக்கூடியவருக்காக அவரின் செயலால் சந்தோஷமடைந்து தங்கள் இறக்கைகளை விரித்து வைக்கிறார்கள். " என்று  நமது நாயகம் சள்ளலாஹு அலைஹி வசல்லம் கூறியதாக அபுதர்தா ரலி யல்லாஹுஅன்ஹு அறிவித்ததாக ஹதீத் நூல்ஹளில் பதிவாகி உள்ளது .. நாம் இதனை வெறும் கதையாக பாராமல்  இது உண்மைதானா என்று அல்லாஹுவின் அருள்மறையில்  தேட முற்படுவோம் அல்லாஹ் சொர்கத்தின் பாதையை இலகுவக்குவான் இன்ஷா அல்லாஹ் .
இதில் எனக்கு அறியாத பல சம்பவங்கள் உள்ளது என்பதே உண்மை ஆதலால் நாம் நம் வரலாறுகளை தேட முற்படுவோம் . இல்லையென்றால் நம் சுய அடையாளத்தை தொலைத்து வெறும் ஜடமாக வாழும் நிலைமை ஏற்பட்டாலும் அச்சரியம் இல்லை ஏன் என்றால் இன்றைய இந்திய முஸ்லீம்களின் நிலை அதுதான்


யா அல்லாஹ் நாங்கள் எதனை அறிய முற்பட்டோமோ அதனை எங்களுக்கு மேலும் மேலும் தெளிவு படுத்துவாயாக ஆமீன்
யா அல்லாஹ் எங்களுக்கு வலுவான ஈமானை வழங்குவாயாக  ஆமீன்
யா அல்லாஹ் எங்களுக்கு இந்திய முஸ்லீம்களுக்கும் பாலஸ்தீனில் உன்னுடைய எதிரிகளான யூத நாசராநிகளிடம்  போர் புரியும் என் தாய்ம்மார்கள் தந்தைமார்கள் என் சகோதரிகள் என் சகோதரர்கள் மேலும் என் சொந்தம்மான பிஞ்சிலேயே உனக்காக சஹீத் என்னும் உயர் அந்தஸ்திற்காக  போராடிக்கொண்டிருக்கு குழந்தைகள் மேலும் காஸ்மீரில் இராக்கில் சிரியா வில் பர்மா வில் அஸ்ஸாமில் குஜராத்தில்  போன்ற உலகம் முளுவதும் உன் தீனுக்காக போராடிக்கொண்டிருக்கும் அனைத்து சகோதரர்களுக்கும் வெற்றியை வழங்குவாயாக . ஆமீன் அவர்களையும் அவர்களின் உடமைகளையும் பாதுகாப்பாயாக ஆமீன்
எங்களை யூத நாசராநிகளின் மற்றும் சைத்தானின் சூழ்ச்சிகளில் எங்களை பாதுகாப்பாயாக ஆமீன்
மரணிக்கும் பொழுது முஸ்லீமாக மரணிக்கும் பாக்கியத்தை தந்தருள் வாயாக  ஆமீன் ஆமீன் யா ரப்பல் ஆலமீன்

இன்ஷா அல்லாஹ் எதை  தெரிந்துகொண்டோமோ அதன் படி  அமல் செய்யும் தௌபிக்கை அல்லாஹ் தண்டருல்வானாக ஆமீன்
யா அல்லாஹ் குரானுடன் எங்கள் அனைவரையும் தொடர்பு படுத்துவாயாக ஆமீன் யா ரப்பல் ஆலமீன்

நண்பர்களே படித்து உங்களது நண்பர்குக்கு இந்த பதிவுகளை பற்றி எத்தி வையுங்கள் அவர்களை இந்த பக்கத்தில் இனைய வேண்டுகோள் விடுங்கள் அல்லாஹ்  ரக்மதுசெய்வானாக ஆமீன் ஆமீன் யா ரப்பல் ஆலமீன்

வாஹிர்தவான அல்ஹம்துலில்லாஹி  ரப்பில்  ஆலமீன்

அஸ்ஸலாமு அழைக்கும் வ ரஹ்மத்துல்லாஹி வ பரக்காத்துஹு